ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >177. ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபம் ஜோதி என்றாலும் அதை அனுபவிக்கும் போது ஏன் கஷ்டம் தோன்றுகிறது?


</span><br>

<p><b>பதில் </b>: முதன்முதலாக ஆத்ம ஸ்வரூபத்தை அனுபவிக்கும் போது பழைய பாவங்களின் காரணமாக மாயையான விஷயங்களில் சுகமும், ஆத்ம விசாரத்தில் துக்கமும் தோன்றும். இது எப்படி என்றால் பிறந்தது முதல் தன் வீட்டுக் கிணற்று உப்பு நீரே குடித்து வந்தவருக்கு, சிறிது தூரத்தில் இருக்கும் சுத்தமான கிணற்றின் நல்ல குடிநீரை எடுத்துக் குடிக்கச் சொன்னால் கஷ்டமாக இருக்கும். தன் கிணற்று உப்பு நீரே நல்ல நீராகத் தொயும். ஏனென்றால் வெய்யிலில் நடந்துசென்று நீர் கொண்டு வர வேண்டியதில்லை, ஆனால் ஒரு முறை பழகிவிட்டால் பிறகு தொயும் தன் வீட்டுக்கருகே இருக்கும் கிணற்று நீர் கெட்டது என்றும், கஷ்டப்பட்டு எடுத்து வந்தாலும் தூரத்தில் இருக்கும் கிணற்று நீரே நல்ல நீர் என்று. பிறகு வழியிலிருக்கும் கஷ்டமும் மறந்துவிடும்.<br>

</p> 

Previous Question Next