ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

170. சங்கத்திலிருக்கும் காலத்தில் சிஷ்யர்களுக்கு முக்கியமான ஐந்து பாவனைகள் யாவை?

பதில் : 1. தபம் - தவத்தால் பொருள்கள் மீதும் ஆசை மீதும் வெற்றி ஏற்படுகிறது.

2. சுருதம் - ஆகமங்களின் அப்பியாசத்தால் தத்துவங்கள் பற்றி சந்தேகம், மயக்கம் போன்றவை நீங்கி உண்மையான பக்தி ஏற்படுகிறது.

3. சத்வம், நற்குணத்தோடு இருப்பதால் எந்தக் கடுமையான துன்பத்தையும் தாங்கும் சக்தி ஏற்படுகிறது.

4. ஏகத்வம், தன் ஆத்மாவைப்பற்றித் தனியே சிந்திப்பதால் தன்னைச் சார்ந்தவர், பிறர் என மோகம் ஏற்படுவதில்லை.

5. சந்தோஷம், மான, அவமான எண்ணமில்லாது ஆகாரம் போன்றவற்றில் சமநோக்குடன் சந்தோஷ பாவனையுடன் இருத்தல் ஆத்ம பாவனையில் திருப்தியுடனும் பொருள்களில் பற்றின்றி இருக்கவும் உதவுகிறது.

Previous Question Next