ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >162. மித்யாத்வம் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?
</span><br>

<p><b>பதில் </b>: ஒரு பொருளை அதுவாக அன்றி வேறாகக் கருதுதல் மித்யாத்வம் ஆகும். உலகின் பல பொருள்களும் பல சுபாவத்தை உடையவை. இதை உணராமை ஏகாந்த மித்யாத்வம் ஆகும். உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது வெறும் பேச்சில் மயங்கி மாயாதை செய்வது வினய மித்யாத்வம் ஆகும். அறிவின் உதவியால் யார் சொல்வது சா என்று உணர முடியாமல் சஞ்சலப்பட்டுக்கொண்டிருப்பது சம்சய மித்யாத்வம் ஆகும். அஞ்ஞானத்தினால் தவறையும் சத்தியம் எனக்கருதுதல், ஹிம்ஸையைப் புண்ணியம் எனக் கருதுதல் போன்றவை விபாத மித்யாத்வம் ஆகும். உண்மையை அறிந்துகொள்ளும் முயற்சியின்றி கண்டதைக் கண்டவாறே கொண்டு எப்படி வேண்டுமானாலும் நம்பி இருப்பது அஞ்ஞான மித்யாத்வம் ஆகும்.<br>
</p>


 

Previous Question Next