ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

148. மரண சூதகத்தை எவ்வாறு ஏற்க வேண்டும்?

பதில் :மரணசூதகம் 12 தினமுடையது. குழந்தை உயிருடன் பிறந்து தொப்புள் அறுப்பதற்கு முன் இறந்து விட்டால் தாய்க்கு 10 தினங்களும் தகப்பனுக்கு 3 நாட்களும் சூதகமாகும். குழந்தை இறந்து பிறந்தாலும் நாபி அறுந்தபின் இறந்தாலும், மாதா பிதா முதலியோருக்கு 10 நாட்கள் சூதகமாகும். பெயாடுமுன் இறந்துவிடின் புதைக்க வேண்டும். அன்னம் உண்ணும்வரை புதைக்கலாம். பல் முளைத்த பின் இறந்தால் எக்க வேண்டும். இதற்கு சூதகம் மாதா பிதா மற்றும் 4 தலை முறையார் கட்கும் 10 நாட்களாம். நெருங்கிய உறவினர்க்கு ஒரு நாள் சூதகம். தூரபந்துக்களுக்கு ஸ்நானம் வரை. தலைமயிர் வாங்கியபின் இறந்தால் மாதா பிதாவிற்கு 10 நாட்கள். நெருங்கிய பந்துக்களுக்கு 5 நாட்கள். வீட்டுக்காரருக்கு 1-நாள். 8 வயதிற்குமேல் இறந்தால் மாதா பிதா 4 தலை முறை வரை. 10 நாட்கள் 5-ம் தலை முறையினர்க்கு 6 நாட்கள் 6-ம் தலைமுறையினர்க்கு 4 நாட்கள், 7-ம் தலைமுறையினர்க்கு 3 நாட்கள் மீதமுள்ளவர்களுக்கு ஸ்நானம் மட்டில், தேசாந்திர மரணமாகில் கேட்ட நாட்களிலிருந்து 10 நாட்கள் மயிர் வாங்குவதற்கு முன் பெண் குழந்தை இறந்தால் மாதாபிதா சகோதரன் பந்துக்களுக்கும் ஸ்நானம் மட்டில், மயிர் வாங்கி 8 வருஷத்திற்கு முன் வரை ஒரு நாளும் பின்னர் விவாகமாகும் வரை 3 நாட்களும் விவாகமான பின் மாதா பிதாவிற்கு 2 தினமும், ஓர் இரவும் மற்ற பந்துக்களுக்கு ஸ்நானம் மட்டில், கணவனுக்கு 10 நாட்கள். 3 அல்லது 4 மாதம் கருவுற்று சிதைவுற்றால் மாதாவிற்கு அத்தனை நாட்களே. பிதாவிற்கு 1 நாள். பிரசவித்த ஸ்திக்கு 40 அல்லது 45 நாட்கள் சூதகமாம். மரணத்தின் தீட்டு 3 தலைமுறையினர் வரை 12 நாட்கள். 8 வயது பாலகன் மரணம் 3 நாட்கள், 3-தின குழந்தை மரணம் 1 தினமாகும்.

தம் குலத்தைச் சேர்ந்த கிரகத்யாகி துறவி இறந்தாலும் யுத்தத்தில் மரணமடைந்தாலும் 1 நாள் சூதகம். தன் குலத்தவர் தேசாந்திரத்தில் இறந்தால் 12 தினங்கள் பூர்த்தியாகுமுன் தொந்தால் மீதி நாட்களும் பூராதினங்களும் கழிந்த பின்னர் தொந்தால் ஸ்நானம் மட்டிலும் கொலை, தற்கொலையானால் 6 மாத சூதகமாகும்.

வேலைக்கா வளர்ப்பு மிருகம் இவைகள் வீட்டு முற்றத்தில் பிரசிவித்தால் 1 தினமும் வெளியில் பாதகமில்லை. வேலைக்காரர்கள் புத்யின் பிரசவம் (அ) மரணம் வீட்டிலேற்பட்டால் 3 தினம் சூதகம். எருமை கன்றீந்த 15 தினங்கட்கும், பசுகன்றீந்த 10 தினங்கட்கும், ஆடு கன்றீந்த 8 தினங்கட்கும், பால் சேர்க்கப்படாது. அதற்குப் பின்தான் வீட்டிற்கு சேர்க்கலாம்.

Previous Question Next