ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

146. மரணம் எத்தனை வகைப்படும்? அவைகளின் விவரம் யாவை?

பதில் :மரணம் 17 வகைப்படும்.

1. ஆவீச்சிகா : ஆயுள் குறைந்து மரணமாதல்

2. தத்பவமரணம் : நிகழ்கால மாறுதல் நின்றுவிடல்

3. அவிதி மரணம் : எவ்வாறு மரணம் நிகழ்கால மாறுதலாகிறதோ அவ்வாறே எதிர்கால மாறுதலுமாகும்.

4. ஆத்யந்த மரணம் : நிகழ்கால மாறுதல்களால் மரணமுண்டாவதுபோல் எதிர்கால மாறுதலில் இல்லை.

5. பாலமரணம் : இது 5 விதம் : 1. அவ்யக்தபாலன் : மிகச்சிறிய பாலகன், 2. விவஹாரபாலன் : வியவ ஹாரமறியாத பாலகன், 3. தாசன பாலன் : மித்யா திருஷ்டி, 4. சாத்ரபாலன் : சாத்திரமின்றி சம்யக்த்வமுடையவன், 5. ஞானபாலன் : சாயானஞான மில்லாதவன்.

6. பண்டித மரணம் 4 வகை : 1. வியவகார பண்டிதன், 2. சம்யக்த்வ பண்டிதன், 3. ஞான பண்டிதன், 4. சாத்ர பண்டிதன், 5. இம்மூன்றும் சேர்ந்த பண்டிதன்.

7. ஆசன்ன மரணம் : பிருஷ்ட சாதுவின் மரணம்

8. பாலபண்டித மரணம்

9. ஸசல்யமரணம் : மாயா, மித்யா, நிதானசல்லிய மரணம்

10. பலாய் மரணம் : தர்ம காயத்திலிருந்து தூர விலகிவிட்ட உத்சாகமற்றவன் மரணம்

11. வசார்த்த மரணம் : இந்திய விஷய வேதனாகஷாய நோகஷாயத்துடன் மாப்பர்

12. விப்ராணமரணம் : உபசர்க்கத்தை பொறுக்க முடியாது பயத்தால் சம்யமத்தை விடுவதில்லை.

13. கிருத்தகிருஷ்ட மரணம் : வில் அம்புபோன்ற ஆயுதத்துடன் மாத்தல்.

14. பக்த பிரத்யாக்யான மரணம் : இது கிரமமாக ஆகாரத்தையும் நீரையும் விட்டு சமாதி மரணமடைதல்.

15. இங்கிளி மரணம் : சமாதி மரணம் செய்து பிறாடம் வையா விருத்யம் செய்யாமல் தானே செய்தல்.

16. பிராயோபகமன சன்யாச மரணம் : மற்றவர்களால் வையாவிருத்தியம் செய்விக்காமலும் தனக்குத்தானே செய்து கொள்ளாமலும் ஒரேயடியாக தியானத்தில் ஆழ்ந்து சமாதி மரணம் அடைதல்.

17. கேவலி மரணம் : அரஹந்தருடைய முக்தி முதலியனவாம்.

Previous Question Next