ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >145. ஏழுவகை மழைகளின் தன்மை யாவை?
</span><br>

<p><b>பதில் </b>:அவசர்ப்பிணி ஆறாங்கால அந்தியத்தில், காற்று, அதிசீதளம், உப்புநீர், விஷம், கைட்டார் அக்னி, தூசு, புகை ஆகிய இவ்வேழுவித மழையும் ஒவ்வொரு ஏழுதினங்களிலும் வர்ஷிக்கின்றன. ஆர்யகண்டத்தின் ஒரு யோசனை (2000 கோல் வரை) கீழிருந்து பொடியாய் விடுகிறது. பின்னர் உத்சர்ப்பிணிகாலம் ஆரம்பித்ததுமே ஏழு ஏழுதினங்கள் வரை மேகங்களால் கிரமமாக ஜலம், தயிர், நெய், பால் முதலிய ரசமுடைய மழை பெய்கிறது. அப்போது பிருத்வி (மண்) கெட்டியாகிறது. அழகும் ஏற்படுகிறது. அது முதல் 49 நாட்கள் பெய்யும் மழையினால் மனிதர்களும் மிருகங்களும் பயந்து விஜயார்த்த பர்வதத்தின் குகைகளிலும் கங்கா சிந்து நதிக்கரைக்கும் போய் விடுவர். அவர்கள் கிரமமாக திரும்பி வந்து தங்கள் இருப்பிடத்தை ஏற்படுத்திக்கொள்வர்.<br>


</p>


 

Previous Question Next