ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >143. எந்த ஜீவன் எங்கிருந்து வந்து உத்பத்தியாகிறது?
</span><br>

<p><b>பதில் </b>:நாரகர் மாத்து மனிதர் அல்லது திர்யக்கதியில்தான் பிறக்கின்றனர். மனிதர் (அ) திர்யக் ஜீவன் இறந்து நான்கு கதிகளிலும் பிறக்கின்றனர். தேவகதியிலிருந்து மனிதர் திர்யக் இரண்டு கதிகளில்தான் பிறக்கின்றனர். அசஞ்சி பஞ்சேந்திய ஜீவன்கள் முதல் நரகத்திற்குமேல் போகாது. ஊர்வன போன்ற ஜீவன்கள் 2ம் நரகம் வரையிலும், பக்ஷ முதலியன மூன்றாம் நரகம் வரையிலும், சர்ப்பம் நான்காம் நரகம் வரையிலும், சிங்கம் 5ம் நரகம் வரையிலும், பெண்கள் 6ம் நரகம் வரையிலும்; கர்ம பூமியிலுள்ள மனிதன் திர்யக் மத்ஸ்யம் முதலியன, 7-ம் நரகம் வரையிலும் பிறவி எடுக்கின்றனர். போகபூமி ஜீவன்கள் தேவராகத்தான் பிறப்பர். எந்த ஜீவன் 7-ம் நரகத்திலிருந்து வருகிறதோ, அது மிருகமாகவே பிறக்கும். அது 7-ம் நரகிலும் வேறு எந்த நரகத்திலாவது ஒருமுறை பிறக்கவேண்டிவரும் அவைகளுக்கு விரதமில்லை. 6-ம் நரகத்திலிருந்து வந்து முனிவராக முடியாது. 5-ம் நரகத்திலிருந்து வந்து முனிவராக முடியும். ஆனால் மோக்ஷமடைய முடியாது. 4-ம் நரகத்திலிருந்து வந்து மோக்ஷமடைய முடியும். ஆனால் தீர்த்தங்கரராக முடியாது. ஒன்று இரண்டு மூன்று நரகங்களிலிருந்து வந்தால் தீர்த்தங்கரராக முடியும். நரகத்திலிருந்து வெளிவந்துள்ள ஜீவன்கள் சக்ரவர்த்தி, பலதேவர், வாசுதேவர் பிரதி வாசுதேவர்களாகப் பிறக்கும் சூக்ஷ்ம வாயுகாயமும் அக்னி காயமுடையவைகளும் மாத்து தியக் ஜீவனாகத்தான் பிற்கும். பிருத்வி ஜல வனஸ்பதி சாரமுடைய ஈந்திய மூவிந்திய நாலிந்திய அசஞ்ஞ பஞ்சேந்திய மும்மனிதரும் சஞ்ஞ மிருகம் இவைகள் மாத்து ஒன்று மற்றொன்றில் பிறக்கவல்லனவாம். மித்யாதிருஷ்டி ஜீவன் சஞ்ஞ அசஞ்ஞ மாத்து வியந்தர ஜோதிஷ்க லோகத்திலும் பவணவாசி தேவராகவும் பிறக்க முடியும். பிற அஜைன தபசிகள் ஜோதிஷ்க தேவராகமுடியும். பவசுழற்சியுடைய சன்னியாசி 5-ம் சொர்க்கம் வரையிலும் வாழ்நாள் வரை சாதுவாகவுள்ளவர்கள், 12-ம் சுவர்க்கம் வரையிலும் போக முடியும். விரதி திர்யக் 12-ம் சுவர்க்கம் வரையிலும் சம்யக்த்வமனிதன் 12-ம் சுவர்க்கம் வரையிலும் நிர்கிரந்தமுனி 9-ம் நவக்ரைவேயகம் வரை போக முடியும் முனிமோக்ஷம் (அ) சர்வார்த்தசித்தி வரை போக முடியும் 2-ம் கற்பதேவர்கள் இறந்து ஏகேந்தியமாகலாம். 12-ம் சுவர்க்கம் வரையிலுள்ள தேவர்கள் திர்யக் (அ) மனிதன் அதற்கு மேலேயுள்ள தேவர்கள் மனிதர்களாகவே பிறக்கின்றனர். சர்வார்த்த சித்தியிலுள்ளவர்கள் லெளகாந்திகதேவர்கள லோகபாலகர்கள் இந்திராணி சசி செளதர்மேந்திரர் எல்லோரும் ஒருபவம் எடுத்து முக்தியடைகின்றனர். யார் ஜினலிங்க முனிவராகி வஞ்சனை செய்கிறானோ கர்வம் கொள்ளுகிறானோ ஆகாரதிகளில் ஆசை கொள்கிறானோ சம்யத்வநாசம் செய்கிறானோ தோஷத்தைக் குருவினிடம் சொல்லவில்லையோ மெளனம் விட்டு போஜனம் கொள்கிறானோ பஞ்சாக்னிதபம் செய்கிறானோ குபாத்திரர்களுக்கு தானம் அளிக்கிறானோ அவர்கள் குபோக பூமியில் குமானிடராகப் பிறக்கின்றனர்.<br>
</p>

Previous Question Next