ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >142. பவ்யம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
</span><br>

<p><b>பதில் </b>:பவ்யம் 3 வகைப்படும். நெருங்கிய பவ்யம், தூர பவ்யம் தூராந்திர பவ்யம் என்பனவாம், எந்த ஜீவன் சிறிது காலத்தில் மோக்ஷம் போகிறதோ, அவைகள் நெருங்கிய பவ்யம், எந்த ஜீவன் மோக்ஷமடைய தகுதியுள்ளதோ வெகு காலத்திற்குப் பின்னர் எப்போதாவது மோக்ஷம் போகவல்லது தூரபவ்யம். எந்த ஜீவனுக்கு பவ்யம் கட்டியுள்ளதோ ஆனால் மோக்ஷமடைவதற்கான நற்காக்ஷ முதலிய சாமகியை அதற்கு வெளிப்படவில்லையோ, அவர்கள் சதாகாலமும் உலகவாசியாகிய அபவ்வியனுக்கு சமமாக ஒரு போதும் மோக்ஷம் போகாதவர்கள் தூராந்திர பவ்வியங்களாவர்.<br></p>

Previous Question Next