ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >136. நரகர்களின் ஸ்வரூபம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:நரகத்தில் வசிப்பவர்கள் அந்நியோன்யமாக விளையாடுவதில்லை. இங்குள்ள திரவ்ய, க்ஷத்ர, கால, பாவம், எண்ணம் நான்குமே மனதிற்கு துக்கமளிக்கவல்லதால் அதை நரகம் என்கிறோம். நரகஜீவன் பஞ்சேந்தியதிரச மனத்துடனுள்ளது. திரசநாளியிலேதான் பிறக்குகின்றனர். நரகம் 7 அதாவது அதோ லோகத்தில் 7 பிருத்வியுள்ளன. அவை சமமாகவும் நீண்டதாகவுமிருக்கும். இவை யாவும் ஒவ்வொரு ரஜ்ஜு அந்தரத்தில் உள்ளது. எல்லாவற்றிற்கும் கீழே கனோததி கனுவாதம் தனுவாதம் வாயுமுள்ளது. இவைகளின் ஆதாரத்தில் இந்த 7 பிருத்விகளும் உள்ளன. மேலே ஐந்தாம் நரகம் வரை அதிக உஷ்ணம் உள்ளது. பின்னர் கீழே அதிசீதளமாக உள்ளது. அங்கு இறந்து அழுகிப்போன நாயின் நாற்றத்தைப் போன்ற துர்க்கந்தம் உள்ளது. நரகர்களின் உத்பத்திஸ்தானம் ஒட்டகம் முதலியவற்றின் முகம் போன்ற தோற்றம். வெயிலில் தும்மல் மாதி ஏற்படுகிறது. அவைகளில் நரக ஜீவன்கள் அந்தர் முகூர்த்தத்தில் பூரண சாரமுடையவராகி மேலே எழும்பி தலைகீழாக வீழ்கின்றனர். திரும்ப திரும்ப மேலெழும்பி கீழ்வீழ்கின்றனர். ஏழாம் நரகத்தில் 500 யோஜனை மேலே கிளம்பி விழுகின்றனர். மற்ற நரகங்களில் பாதி பாதி மேலெழும்பி வீழ்கின்றனர். முதல் நரகத்தில் 16/125 யோஜனை மேலெழும்பி வீழ்கின்றனர். முதல் நரகத்தின் உள்ளவர்கள் உயரம் ஏழே முக்காலே வீசம் வில் பின்னர் இதுபோல் இரண்டுமடங்காக அதிகாத்துக்கொண்டே போகின்றன. 7 ம் நரகத்தில் 500வில் உயரம். நரகர்களின் பிறப்பிடம் மனதிற்கும் சாரத்திற்கும் பெருந்துக்கமானது. ஒருவர்க்கொருவர் பகை விளைவிப்பர். அவர்களுக்கும் சாரத்தின் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் சக்தியுண்டு. அவர்கள் தானே மிருகமாகமாறி தங்கள் சாரத்தையே வாள் முதலியனவாக செய்து அதிக துக்கமளிக்கின்றனர். மூன்றாம் நரகம் வரை அசுர குமாரர் சென்று சண்டை விளைவிக்கின்றனர். அங்கு அவர்கள் மண்ணைத் தின்கின்றனர். ஆனால் பசியடங்காது உப்புத்தண்ணீர் அருந்துவர். தாகம் அடங்குவதில்லை. முதல் நரகத்தில் முதல் கூரையின் மண் மத்திம லோகத்திற்கு வந்துவிடின் அதன் துர்நாற்றத்தால் 1/2 குரோஸதூரம் வரையிலுள்ள பிராணிகள் இறந்துவிடும். அவர்கள் பூர்ண ஆயுள் பெற்றவர்கள். வைக்யக சாரமுடையவர்கள் சாரம் துண்டிக்கப்பட்டதும் இரு பக்கமும் தானாகவே சேர்ந்துவிடும் சக்தியுடையவர். குறைந்த ஆயுள் 10000 வருஷங்கள் நீடித்த ஆயுள் 33 சாகரம் முதல் நரகத்தில் உத்கிருஷ்ட ஆயுள் உள்ளவரே இரண்டாம் நரகத்தில் ஜகன்ய ஆயுளாவர். உச்ச வயது முறையே 1, 3, 7, 10, 17, 22, 33 சாகரமாகும்.<br>

</p>

Previous Question Next