ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >135. மிலேச்சர்கள் யார்? அவர்கள் எங்குள்ளனர்?
</span><br>

<p><b>பதில் </b>:எந்த இடத்தில் தர்ம பிரசாரமில்லையோ நாலாங்காலத்தைப் போலுள்ளதோ அந்த மிலேச்ச கண்டத்தில் வாழ்பவர்களே மிலேச்சராவர். இப்படிப்பட்ட மிலேச்சகண்டம் ஜம்பூத்வீபத்தில் 160 விதேகத்திலும் 10 பரத ஐராவதத்திலும் உள்ளன. இரண்டரை தீபத்தில் 850 உள்ளன. பரத ஐராவதத்தில் நாலாங்காலத்தில் தான் குறைதலும், நிறைதலுமாகிய பாவர்த்தனை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மிலேச்சகண்டங்களின் மனிதர் ஆர்ய கண்டத்தில் வந்து தர்மத்தை கடைபிடிக்க முடியும். 96 அந்தரத்வீபம் லவணோததயிலும் காளோத்தியிலுமுள்ளன. அங்கு குபோக பூமி உள்ளது. அங்கு வசிப்பவர்களும் மிலேச்சர்களே அவர்கள் மிருகமுகம் முதலியன பெற்று மனித ஜோடியாகப் பிறக்கின்றனர்.<br>


</p>

Previous Question Next