ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >134. தேவாங்கனா என்பவர் யார்?
</span><br>

<p><b>பதில் </b>:தேவஸ்ரீயை தேவங்கனா என்கிறோம். 16 சுவர்க்கம் வரையில்தான் தேவிகளுள்ளனர். மேற்கொண்டு இல்லை. ஆனால் ஸ்வர்க்கத்திலுள்ள எல்லாதேவிகளும் முதல் இரண்டு சுவர்க்கத்தில் தான் தோன்றுகின்றனர். தென்திசை தேவர்களின் தேவிமார்கள் செளதர்மகல்பத்திலும் வடதிசை தேவர்களின் தேவிமார் ஈசானத்திலும் தோன்றுகின்றனர். இப்படிப்பட்ட தேவாங்கனைகளின் உற்பத்தியாகும் விமானம் செளதர்மத்தில் 6 லக்ஷமும் ஈசானத்தில் 4 லக்ஷமும் உள்ளன.<br>


</p>

Previous Question Next