ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

133. தேவர்கள் யார்? அவர்கள் எத்தனை வகைப்படுவர்?

பதில் :தேவகதி நாமகர்ம உதயத்தால் இச்சானுசாரம் கிடை செய்பவர். அவர்களை தேவர் என்கிறோம். அவர்களிடம்
அணிமா கணிமா முதலிய தெய்வ சக்திகள் உண்டு. அதனால் அவர்கள் சாரத்தில் விசேஷ சக்தியுண்டாக்க முடியும். சிறிய, பொய,
இலேசான, பளுவானதாகவோ தங்கள் விருப்பப்படி ரூபத்தை மாற்றிக்கொள்வர். இதனால்தான் அவர்கள் சாரம் வைக்யகம் எனப்படுகிறது.
அவர்கள் சாரம் மனிதான் அளவுள்ளதாகவும் மிகவும் அழகுடையனவாகவுமிருக்கும் சாரத்தில் தாது மலம் ரோகம் முதலியன கிடையாது.
அவர்கள் ஆயுள் ஒரு சாகரம் 15 நாட்களுக்கொருதரம் ஸ்வாசிக்கின்றனர். 1000 ஆண்டுகளுக்கொருதடவை பசியை யறிகின்றனர்.
அப்போது தொண்டையிலிருந்து அமிர்தங் சுரக்கிறது. அவர்கள் கவளரூபமாக ஆகாரம் உண்பதில்லை. அவர்கள் உபபாத
படுக்கையில் ஜனிக்கின்றனர். அந்தர் மகூர்த்தத்திலேயே 9 வயது யெளவனராகி எழுந்திருப்பர். இது புண்ணியத்தின் பலன் என்று
தன் அவதி ஞானத்தாலறிவர். முதலில் ஸ்நானம் செய்து ஸ்ரீஜிநேந்திர பிரதிமைக்கும் பூஜை செய்கின்றனர். தேவர்கள் 4 வகைப்படும்.

1. பவணவாசிகள்

2. வியந்தரர் : இவர்கள் முதல் பிருத்வியின் கரடுமுரடான பாகத்திலும் மத்திய பாகத்திலும் அங்குமிங்குமுள்ளனர்.

3. ஜோதிஷ்கர் : இவர்கள்சூய சந்திராதி விமானங்களிலுள்ளனர்.

4. கல்பவாசியர் : இவர்கள் ஸ்வர்க்கத்தில் வசிக்கின்றனர். இவர்களின் உத்கிருஷ்ட ஆயுள் 33 சாகரம் ஜகன்ய ஆயுள் 10000 வரஷங்களாகும். சம்யக்திருஷ்டி ஜீவன் மரணமடைந்து கல்பவாசி தேவராகத்தான் பிறப்பர். மித்யா திருஷ்டி ஜீவன் மற்ற மூவகை தேவர்களாக பிறப்பர்.

Previous Question Next