ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

129. போக பூமியின் ஸ்வரூபம் யாது?

பதில் :போக பூமியில் கற்பகத்தருக்களிலிருந்து இனிய

பதார்த்தங்களை எடுத்து மனிதர் மிருகம் முதலியவைகள்
சந்தோஷத்துடன் வாழ்க்கையைக் கழிக்கின்றன. அஸி, மஸி முதலிய அறுவகைத்

தொழில் செய்வதில்லை. ஜம்பூர்த்வீபத்தில்
தேவகுரு, உத்தரகுரு உத்தமபோக பூமியாகும். ஹைமவதம் ஹைரண்ய

வதக்ஷத்திரம் ஜசுன்யபோக பூமியாகும். உத்தம போக
பூமியிலுள்ளவர்கள் இரட்டையராகப் பிறந்து மூன்று நாட்களுக்குள் உணவருந்தி

மூன்றுபல்லம் ஆயுளுடையவராவர், மத்திமபோக
பூமியில் இரண்டு தினங்களுக்குள் உணவருந்தியும் இரண்டுபல்லம்

ஆயுளுடையவராகவும் ஆவர். ஜகன்யபோக பூமியில் ஒரு
நாளுக்குள்ளே உணவருந்தி ஒருபல்லம் ஆயுளுடையவராகவும் ஆவர்.

உத்தம மத்திம ஜகன்ய பாத்திரங்களுக்கு தானமளித்ததனால்

இவைகளில் முறையே பிறக்கின்றனர். போக பூமியின் தரை
கண்ணாடி போல் மணிமயமானது. நான்கு அங்குல உயரம் நறுமணமுள்ள தூசுகள்

நிரம்பியது. போக பூமியில் இரட்டையர்
பிறந்தவுடனே மாதா பிதா மாக்கின்றனர். அவர்கள் 49 நாட்களில்

வாலிபமடைகின்றனர். உத்தமபோக பூமியினர் வைரம்
போன்றவர். மத்திமபோக பூமியினர் வஜ்ரத்திற்கு சமமானவர்.

ஜகன்யபோக பூமியினர் நெல்லிக்காய்க்கு சமமான அமிர்தமயமான
ஆகாரம் உட்கொள்ளுகின்றனர். ஆயுளின் அந்தியத்தில் ஆடவர்க்குத் தும்மலும்

பெண்டிர்க்குக் கொட்டாவியும் ஏற்பட்டு சாரம்
மேகம் போல் மாய்ந்து விடுகிறது. அவர்களுக்கு மலமூத்திரம் உண்டாவதில்லை.

வஜரவிரஷபநாராச சம சதுரமுள்ள இருப்பிடம்.
ஸ்தி புருஷாருவர்க்கும் உள்ளது. போக பூமியில் உள்ள

மித்தியாதிருஷ்டிகள் மரணமடைந்து பவண லோகத்திலும்

சம்யக்திருஷ்டி
செளதர்ம கல்பத்திலும் பிறப்பர்.

Previous Question Next