ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >125. உபாதான காரணம் என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>: எந்த பொருள் செய்முறையால்தானே தோற்றத்தில் மாறுதலடைகிறதோ, அப்பொருளே உபாதானமாகும். குடம் உண்டாவதற்கு மண் காரணமாகும். அனாதி காலம் தொட்டு திரவியத்தில் மாறுதல் தொடர்ந்து நடந்துகொண்டே வந்துள்ளது. அதில் முதல் சமயத்திலேற்பட்ட மாறுதல் உபாதானகாரணமாகும். பின்னாலுள்ளது கடைசி க்ஷணத்திலேற்பட்ட மாறுதல் செயலாகும். கோதுமையிலிருந்து மாவும், மாவிலிருந்து ரொட்டியும் செய்யப்படுவது போலாம். இங்கு மாவின் உபாதானம் கோதுமையும் ரொட்டிக்கு உபாதானம் மாவுமாகும்.
காலம்.<br>
</p>

Previous Question Next