ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

122. ஆகமம் (அ) சுருதஞானம் எத்தனை பிกขவுகள்? அவை யாவை?

பதில் : பொருள் வேறுபாட்டால் 4 பிกขவாகும். 1. பிரதமானுயோகம், 2. கரணானுயோகம், 3. சரணானுயோகம், 4. திரவ்யானுயோகம் என்பன. இவைகள் ஆத்மஞான உற்பத்திக் காரணமாகிய விஷயங்களின் விவரமுள்ளதால் இவைகளை வேதம் என்று சொல்லப்படுகிறது.
அவைகளின் விவரம் கீழ்க் காணலாம்.

1. பிரதமானுயோகம் : இதில் 63 சலாகாபுருஷர்கள் அதாவது 12 சக்கரவர்த்திகள் 9 பலதேவர்கள், 9 வாசுதேவர்கள், 9 பிரதி வாசுதேவர்கள் இவர்களுடனடங்கிய வேறு சில முக்கிய புருஷர்களின் சாขத்திரங்கள் சொல்லப்படுகின்றன. ஆரம்பத்தில் தருமத்தை அறிவதற்கு உபயோகமாவதால் இதற்கு பிரதம அனுயோகம் எனப்படுகிறது.

2. கரணானுயோகம் : இதில் மூவுலகத்தில் உள்ள விஷயங்களைப்பற்றி விกขவாகச் சொல்லப்படுகிறது. மேலும் ஆத்மாவிற்கு கர்மத்தின் சேர்க்கையால் எந்தெந்த குணநிலைகள் ஏற்படுகின்றன. அம்முறையால் குறைவாகி, ஆத்மா அமைதி நிலையையடைகிறது. கர்மங்களின் பேதம், பந்தம், உதயம், நினைத்தல் முதலியன விกขவாக சொல்லப்படுகின்றன. இதனுடைய ஒவ்வொரு விஷயமும் கணித சம்பந்தபட்டதால் இது கரணானுயோகம் என்படுகிறது.

3. சரணானுயோகம் : இதில் ஸ்ராவகர் முனிவர்களின் தருமம் சொல்லப்படுகிறது. இதில் கிரமமாக தீக்ஷண்யமான கருத்து ஏற்படுவதற்கான அனுஷ்டான முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் இது சரணானுயோகம் எனப்படுகிறது.

4. திரவ்யானுயோகம் : இதில் ஜீவன் முதலிய ஆறு திரவியங்கள் சட்தத்வம் (ஷட்தத்வம்), நவபதார்த்தம், ஜீவனுடைய குணங்கள் இவைகளைப்பற்றி சொல்லப்படுகின்றன. இதனால் ஜீவனுடைய தீய எண்ணங்களைத் துறந்து நல்லெண்ணங்களைப் பெறுவதற்கான விருப்பம் ஏற்படுகிறது. இதில் திரவியங்களைப் பற்றிய வர்ணனைகளை விளக்கமாகக் கூறுவதால் இது திரவ்யானுயோகம் எனப்படுகிறது.

Previous Question Next