ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

119. கல்லினாலான பிம்பம் எவ்வாறு புண்ணியம் பெறச் செய்ய வல்லது?

பதில் : ஜீவனுடைய சுபாசுப எண்ணத்தைக்கொண்டே வினை உற்பத்தியாகிறது. அதனால் புண்ணியபாவபந்தம்
ஏற்படுகிறது. எவ்வாறு ஸ்படிகக்கல்லில் வண்ண ஒளிபடுவதால் அதனுடைய பிரகாசம்கூட அதே வண்ணமாகிறது. அதேபோல்
ஜீவனுடைய விஷயமுமாகும். ஜீவனில் சுபாசுப எண்ணம் கர்மத்தின்படி உள்ளே ஏற்படுகிறது. இங்கு ஜினபிரதிமை நல்லெண்ணம்
உற்பத்தி செய்வதற்கு காரணமாகும். ஏனெனில் ஜிநேந்திரபகவானின் வீதராக முத்திரை மனதில் வைக்காமல் அவருடைய திவ்ய
ஜீவனின் நினைவுதான் பூஜிப்பவனுக்கு ஞாபகம் வருகிறது. புண்ணியாத்ம மகாபுருஷர்களின் ஞாபகம் வருதலால் இந்த சுப
எண்ணத்தால் ஜினதேவருக்கு பூஜிப்பது புண்ணிய பந்தத்திற்காஸ காரணமாகும். அந்த மூர்த்தி நிலைக் கண்ணாடி போன்றதாகும்.
நிலைக் கண்ணாடியில் முகம் பார்க்கப் படுகிறதே போல் காணப்படும். எந்த எண்ணத்துடன் ஜிநபகவானுடைய பிரதிமையை பார்க்கப்படுகிறதோ அதே எண்ணத்தின் தன்மை பூஜை
செய்பவனுக்கு உண்டாகும் புண்ணியபாபம் ஜீவன்களின் நிஜமான எண்ணங்களுக்கு அடக்கமானது. எவ்வாறு ஒரு அழகுடைய
வேசியின் இறந்த தேகத்தைக் கண்டு ஒருகாம விருப்பமுடையோன் எண்ணம் அவளுடன் உபபோகமனுபவிக்கவும், ஒரு நாயின்
எண்ணம் பிடுங்கித்தின்ன வேண்டுமென்றும், ஒரு அறிவாளியின் எண்ணம் உபகாரம் செய்ய வேண்டுமென்றும் ஏற்படுகிறது. இவ்வாறே
ஜினபிம்பத்தைப் பார்த்து தங்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்க ஜனங்கள் தாசிக்கின்றனர். வேசியின் ஜீவனற்ற சாரம் மூன்று
ஜீவன்களுக்கு மூன்று வேறு வேறு வகையான எண்ணம் உற்பத்தியாவதற்குக் காரணபூதமாய்விட்டது. இந்த விசித்திரமான சக்தி
அதில் எங்கிருந்து வந்தது. அதுவோ ஜடமாகும். அதில் மகிமையைத் தரவல்ல ஒரு சக்தியும் இருந்ததில்லை. அதன் காக்ஷ வித
விதமான எண்ணத்தை 3 பிராணிகளின் இதயத்தில் உற்பத்தி செய்து விட்டது. இந்த சந்தர்ப்பம் கிடைத்ததால் ஜீவன்களின்
எண்ணங்கள் மாறுவதற்கான பிரத்யக்ஷ பிரமாணமாகும். இதனால் ஜின பிரதிமையிடம் வெறுப்படைவதற்கு யாதொரு அவசியமுமில்லை.
திடமுயற்சிகொண்டு அந்த தீர்த்தங்க பகவானின் திவ்ய குணங்களை மனதிலிறுத்தி பூஜிப்போமாகில் புண்ணியத்தைச் சுலபமாகவே
பெறமுடியும் சந்தேகமேயில்லை.

பக்தி நிறைந்த அன்புருவான ஜீவன் ஜிநேந்திர பிரபுவின் முன்பு, தன்னை மறந்து ஜிநேந்திர பூஜையில் எஜமானன் வேலையாள் என்ற
உறவுமில்லாமல் அங்கு யார் பூஜை செய்கிறானோ அதை பூஜிக்கக்கடவது, இந்த எண்ணம் தான் முக்கியமாகும். அங்கு யாசிப்பதும்
வேண்டிக்கொள்வதுமில்லை. சந்தேகமற்ற இதயத்துடன் பிரபுவின் ஆத்மீக குணங்களில் லயித்து விடுவதே ஜைன பூஜையாகும்.

ஜைனர்களின் பூஜை, மூர்த்தி பூஜையேயல்லாமல் இலக்ஷய பூஜையுமாகும். ஜைனகிரந்தங்களில் கல் முதலியவைகளால் ஜினதேவ்வர
கற்பனை செய்து பூஜை செய்ய வெளிப்படையான தடை உள்ளது. வீதராக மூர்த்தியின் உதவியால் உபாசகதீர வீரனாக தோத்காரக
தீர்த்தங்கரர்களின் அபூர்வ குணங்களால் தம் உள்ளெண்ணங்களை, அழகுறச் செய்கிறது. ஜிந பூஜையில் ஏழ்மைக்கும் யாசனா
விற்கும் இடமில்லை. அதாவது யாவரும் சாசமானம் என்பதேயாகும். அங்கு ஆத்ம அனுபவத்திற்குத் தான் முக்கியத்துவம்
கிடைக்கிறது. ஆகையால் ஜிந பூஜையில் சந்தேகம் கொள்வது வீணேயாகும்.

Previous Question Next