ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >114. திவ்யத்வனி என்பது யாது?

</span><br>

<p><b>பதில் </b>: கேவலிபகவானுடைய திருவாக்கினின்றும் வெளிப்படுகின்ற மேகக் கர்ச்சனைபோன்ற சப்தம். அது 4 குரோசதூரம்
கேட்கக்கூடியது. இதுவே திவ்யத்வனியாகும். இத்வனி வெளிப்படும்போது ஒருவித சப்தமுண்டாகிறது. அது தேவர், மனிதர், மிருகம்
முதலிய எல்லோருடைய பாஷையாக பிரதிபலிக்கிறது (ஏற்படுகிறது). எல்லோரும் தங்கள் தங்கள் பாக்ஷகளில் கேட்கின்றனர்.
மேகத்தினின்றும் பொழியப்படும்நீர் ஒரே விதமாக இருந்தபோதிலும் மண்ணின் பேதத்தால் அநேகவித ருசி ஏற்படுவது போல் வென்று
அறிய வேண்டும். இத்வனி முற்றிலும் அக்ஷ்ரமில்லாததோ அக்ஷ்ரமற்றதோ அல்ல. ஆனால் அக்ஷ்ரத்தன்மையுடையது. சிற்சில
இடங்களில் இதை நிரக்ஷசப்தம், அனக்ஷரவார்த்தை, அர்த்தமாகதிபாஷை என்று சொல்லப்படுகின்றன. இதன்மூலம் சகல
பதார்த்தங்களும் மோக்ஷமார்க்கத்தின் சகல சபா நிவாசிகளும் தருமாமிருதத்தால் நிரப்பப்பட்டு பரமதிருப்தி அடைகின்றனர்.<br>


</p>

Previous Question Next