ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

113. சமவ சரணத்தின் தோற்றம் யாது?

பதில் : தீர்த்தங்கரர் அமர்ந்து தர்மோபதேசம் செய்யும் சபையிலுள்ள இடத்திற்கு சமவசரணம் என்று பெயர் இது கேவல ஞானம் ஏற்பட்ட பிறகு இந்திராதி தேவர்களால் இயற்றப்பட்டதாகும். இது முதல் தீர்த்தங்கரர் காலத்தில் 12 யோசனை பரப்பளவை எல்லையாகக் கொண்டது. பின்னர் அரையோசனை குறைந்து குறைந்து கடைசி தீர்த்தங்கரர் காலத்தில் ஒருயோசனை பரப்பளவுடையதாக ஆகிறது. அமைப்பு கமலம் போன்றது. தீர்த்தங்கரர் அமரும் கந்தகுடி என்னுமிடம் மொட்டு போலும் வெளி அமைப்பு தாமரை மலாதழ் போன்றும், பூமியின் நிறம் நீலமணி போன்றும் இருக்கும். இந்திராதி தேவர்கள் தூரத்திலிருந்து வழிபடுமிடத்திற்கு மானாங்கணா என்று பெயர். அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வழிகள் உண்டு. அவற்றின் மத்தியில் மானஸ்தம்பங்கள் உள்ளன. அவைகளின்மீது ஜிந பிரதிமைகள் உள்ளன. யாவரும் அங்கு பூஜை செய்கின்றனர். மானஸ்தம்பத்தின் முன் நான்கு திசைகளிலும் தடாகங்கள் உள்ளன. முதலாவது கோட்டை வெள்ளியைப்போன்ற நிறத்தையுடையது. இதன் நான்கு பக்கங்களிலும் அகழிகள் இருக்கின்றன. அகழிக்கு நான்கு பக்கங்களிலும் வனங்கள் உள்ளன. கோட்டையின் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் உள்ளன. இவற்றின்மீது வியந்தர தேவர்கள் துவாரபாலகர் போல் ஆயுதம் தாங்கி நிற்கின்றனர். வாயிலுக்கு உள்ளே சென்றால் துவஜ பீடமுள்ளது. நான்கு திசைகளிலும் 4,68,36000-க்கும் அதிகமான கொடிகள் உள்ளன. சொர்ணமயமான 2-வது கோட்டை உண்டு. அவற்றின் வாயிலில் கையில் பிரம்பை வைத்துக்கொண்டு பவணவாசி தேவர்கள் நிற்கின்றனர். பிறகு கற்பகவிருக்ஷ வனங்கள் உள்ளன. அங்கு முனிவர்களும் தேவர்களும் அமருவதற்கேற்ற சபா கிரகம் உள்ளது. மூன்றாவது கோட்டை ஸ்படிகமணி மயமாக உள்ளது. இவற்றின் வாயில்களில் கல்பவாகி தேவர்கள் துவாரபாலகரைப்போல் நிற்கின்றனர். பின்னர் கொடிகள் நிறைந்த லதாகிரகம் உள்ளது. அநேக ஸ்தூபம் முதலியன உள்ளன. இவற்றின் மத்தியில் மூன்று பீடத்தின்மீது ஸ்ரீ மண்டபம் உள்ளது. மத்தியில் கந்தகுடி நான்கு பக்கங்களிலும் 12 சபைகள் உள்ளன. அவற்றில் முறைப்படி,

1. முனிவர்கள்

2. கல்பவாசி தேவர்கள்

3. ஆர்யகைகள்

4. ஜோதிஷ்க தேவிகள்

5. வியந்தர தேவிகள்

6. பவணவாசி தேவிகள்

7. பவணவாசி தேவர்கள்

8. வியந்தர தேவர்கள்

9. ஜோதிஷ்க தேவர்கள்

10. கல்பவாசி தேவர்கள்

11. மனிதர்கள்

12. மிருகங்கள்

இவைகள் நான்கு பக்கங்களிலும் உள்ளன.

Previous Question Next