ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >111. நிர்வாண கல்யாணம் என்பது யாது?

</span><br>

<p><b>பதில் </b>: தீர்த்தங்கரர் எப்போது சித்தியடைகின்றனரோ, சாரத்திலிருந்து விடுபட்டு சித்தராக மாறுதலடைகிறாரோ
அதே சமயம் இந்திராதி தேவர்கள் வந்து சாரத்தை சிவிகையிலமர்த்தி நறுமண திரவியங்களால் பஸ்மமாக்குகின்றனர். பிறகு அந்த
அக்னியை புனிதமானதெனக் கருதி பூஜிக்கின்றனர். பிறகு சாரத்தின் பஸ்மத்தைத் தங்கள் நெற்றி இருகைகள் கழுத்து மார்பு
இவைகளில் பூசிக்கொள்கின்றனர். பொய உத்ஸவம் செய்கின்றனர். அவ்விடத்தில் இந்திரர்கள் வஜ்ரத்தால் சின்னம் செய்து வைப்பர்.
அதுவே சித்தஸ்தானம் எனக்கருதி சகல ஆண் பெண்களும் சித்தக்ஷத்திரம் என ஏற்று பூஜை செய்கின்றனர். இந்திராதி தேவர்கள்
அங்கேயே சித்தக்ஷத்திரத்தை உண்டு பண்ணுகின்றனர். இதுவே நிர்வாண கல்யாணம் என்பதாகும்.<br>


</p>

Previous Question Next