ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >110. திகம்பர பிம்பத்தின் ஸ்வரூபம் என்ன?
</span><br>

<p><b>பதில் </b>: தீர்த்தங்கர பகவானின் தியானமயமான நிர்வாண பிம்பம். கல் உலோகம் முதலியவைகளால் செய்யப்படுகின்றன.
அரகந்த பிம்பத்தில் 8 அதிசயங்கள் குடை முதலியன விருக்கும் சித்தபிரதிமையில் இராது. ஆச்சார்ய உபாத்தியாய சாதுக்களுக்கும்
ஸ்ருதஸ்கந்தத்திற்கும்கூட மூர்த்திகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மூர்த்தியும் அவரவர்களுடைய குணங்களை பிரகாசிக்கச்செய்ய வல்லனவாயுள்ளன.
பிம்பத்தின் மீது வஸ்திரம் முதலிய அலங்கார சின்னமில்லை. காயோத்ஸர்க்கமாக நின்ற ஆசனமும் பல்லியங்காசனத்தில் அமர்ந்த
ஆசனபிம்பங்களும் உண்டு. தக்ஷணத்தில் அர்த்தபத்மாசனமும், பல்லியங்காசனமுமான பிம்பங்கள் பழையன பல கிடைக்கின்றன.
பிம்பங்கள் அங்கம் உபாங்க முதலியன சாயாக உள்ளவைகளாக இருக்க வேண்டும். பழைய பிம்பங்கள் உபாங்கங்கனின்றியே
பூஜிக்கத்தக்கது. சிரசு, பாதம், கை, வயிறு இவைகள் அங்கங்களாகும். விரல்கள் முதலியன உபாங்கங்கள், மனிதர்களால்
செய்யப்படாத சைத்தியாலையங்களிலுள்ள பிம்பங்கள் சிம்மாசனம் குடை முதலிய எட்டும் அவருடைய ரத்னமயமான நீலநிறகேசமும்,
வஜ்ரம் போன்ற தந்தமும், பவளம் போன்ற உதடும், இளந்தளிர் போன்ற உள்ளங்கையும், பாதங்களும் உள்ளன. சாக்ஷத்பகவான்
விரக்ஷபதேவரே அமர்ந்திருப்பதுபோல் பிரகாசமாகக் காணப்படுகிறது. 500வில் உயரமுள்ள அப்பிம்பங்களின் இருமருங்கிலும் 32
ஜோடி நாக குமாரர்கள் (அ) யக்ஷன்கள் சாமரை ஏந்தி நிற்கின்றனர். அருகில் ஸ்ரீ தேவி ஸ்ருததேவி, சர்வாண்ஹயக்ஷன் சனத்குமார
யக்ஷன் முதலியவர்களின் உருவம் உள்ளன. 108 எண்ணிக்கையுள்ள ஒவ்வொன்றும் 8-வித மங்கள திரவியங்களை ஏந்தி
வைக்கப்பட்டுள்ளன (கெண்டில், கலசம், கும்பம், விசிறி, கொடி, சாமரை, குடை, கண்ணாடி முதலியவைகளாகும்).

</p>

Previous Question Next