ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

106. தீர்த்தங்கரர்களின் 34 அதிசயங்கள் யாவை?

பதில் :ஜன்ம அதிசயங்கள் 10.

1. மலமூத்ரமில்லாத சாரம்.

2. வியர்வை இன்மை.

3. வெண்ணிற ரத்தம்.

4. வஜ்ரநாராச சம்ஹனனம்.(சரீர அமைப்பு)

5. சமசதுரமான இருப்பிடம்.

6. அற்புதத் தோற்றம்.

7. மிகுமணம்.

8. 1008 லக்ஷணங்கள்.

9. நிகரற்றபலம்.

10. பியவசனம்.

கேவலஞானம் உண்டாகும்போது அதிசயம் 10.

1. இமை கொட்டாமை.

2. நகமும் ரோமமும் வளராமை.

3. உணவு பற்றிய சிந்தனையின்மை.

4. முதுமையடையாமை.

5. நிழல் தோன்றாமை.

6. நான்கு பக்கங்களிலும் காக்ஷயளித்தல்.

7. நூறு யோஜனை வரை சுபிக்ஷமுடைமை.

8. உபசர்க்கமும் துக்கமுமின்மை.

9. ஆகாயத்தில் செல்லல்.

10. சகல கலைகளிலும் நிபுணத்வம்.

தேவர்களால் செய்யப்படுபவைகள் 14.

1. பகவானுடைய அர்த்தமாகதி பாஷையையறிதல்.

2. உயிர்களிடம் சிநேக பான்மை.

3. எல்லா ருதுக்கால பூக்களும் பழங்களும் இருத்தல்.

4. பூமி கண்ணாடியைப் போன்றது.

5. சுகமானகாற்று வீசல்.(மந்த மாருதம்)

6. சுகம் அளிக்கவல்ல இருப்பிடம்.

7. பூமி கூழாங்கற்களின்றி இருத்தல்.

8. பொற்கமல மேற்படல்.

9. பூமி ஏராளமான தானியத்தை அளித்தல்.

10. ஆகாயம் நிர்மலமாதல்.

11. திசைகள் நிர்மலமாதல்.

12. ஜயகோஷம்.

13. தர்மசக்கரம்.

14. புஷ்பமா பெய்தல் என்பன.

Previous Question Next