ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >104. தீர்த்தங்கரர்கள் யார்? எத்தனை பெயர்கள்?

</span><br>

<p><b>பதில் </b>:எவர் தீர்த்தங்கர நாமகர்ம உதயத்தசல் தீர்த்தங்கரராகின்றனரோ அவர்கள் 16 காரணபாவனைகளைப் பெற்று
இந்த நாமகர்ம பந்தமாகிறதோ அவர்களே தீர்த்தங்கரர்கள் ஆவர். அவாடம் இந்திராதி தேவர்கள் விசேஷ பக்தி செய்கின்றனர்.
அவர்கள் கேவலக் ஞானமடைந்த பின்னர் தர்மோபதேசம் செய்து கொண்டே சாஸ்திரங்களின் மகிமையைப் பற்றி சொற்பொழிவாற்றுவர்.
இப்படிப்பட்ட தீர்த்தங்கரர்கள் 24 ஆவர். ஒவ்வொரு அவசர்ப்பிணியின் நாலாங்காலத்தில் பரதத்திலும் ஐராவதத்திலும் தோன்றுவர்.
விதேகத்தில் சதாகாலமும் இருந்து வருவர். அங்கு குறைந்த பக்ஷம் 20-ம், அதிகபக்ஷம் 160 வரை ஒரே காலத்தில் தோன்றுகின்றனர்.
ஒரு சமயத்தில் 5 பரதத்தில் ஐந்தும், 5 ஐராவதத்தில் ஐந்தும் இவ்வாறு 10 தீர்த்தங்கரர்களையும் மேலே சொன்ன 160 உடன் சேர்க்க
170 தீர்த்தங்கரர்களாகின்றனர். ஒரே சமயத்தில் இதனினும் அதிகமாகத் தோன்றமாட்டார்கள். பரதத்திலும் ஐராவதத்திலும்
அவர்களுக்கு பஞ்சகல்யாண பூஜை செய்கின்றனர். விதேகங்களில் குறைவாகவும் நடக்கின்றன. அங்கு அதே பிறவியில் துறவி (அ)
இல்லறத்தான் தீர்த்தங்கரராக முடியும். எந்த தீர்த்தங்கரர் நாம கர்மத்தில் பக்தி செலுத்துகின்றனரோ அப்படிப்பட்டவர்கள் 3-ம்
நரகம் வரையிலுள்ள நரகர்கள் மரணமடைய ஆறுமாதமிருக்கும்போது அவர்கள் தேவர்கள் மூலமாக உபசர்க்கமின்றி
செய்யப்படுகின்றனர். சொர்க்கங்களில் 6 மாத முன்னரே மாலை முதலியன கருகி மணமற்றனவாகிவிடும்.<br>

</p>

Previous Question Next