ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >102. சித்தர்களின் லக்ஷணம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:எந்த ஆத்மாவின் எட்டுகர்மங்களும் நாசமடைந்து எண் குணங்கள் தோன்றிவிட்டதோ தேகமின்றி புருஷாகார ஆத்மா உலகத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறதோ, நித்யஞான ஆநந்தத்தில் மூழ்கியுள்ளதோ சாதிக்கவேண்டியதை சாதித்து சித்தி பெற்றுள்ளதோ பூரண கிருத கிருத்யமோ நிலையாக உள்ளதோ குணப்ரபாவத்தில் சதாலயித்துள்ளதோ இப்படிப்பட்ட தன்மைகள் தான் சித்தர்களின் இலக்ஷணம். 8 கர்மங்களின் நாசத்தால் 8 குணங்கள் வெளிப்படுகின்றன. ஞானவர்ணீய நாசத்தால் அநந்த ஞானமும் தாசனாவர்ணீயநாசத்தால் அநந்த தாசனமும் மோகநீய கர்மத்தால் சம்யக்தானமும், அந்தராய கர்மநாசத்தால் அநந்த வீயமும், ஆயுகர்ம நாசத்தால் தோற்றமும் நாமகர்மத்தால் சூக்ஷமத்துவமும், கோத்திர கர்மநாசத்தால் குருவகுத்வமும், வேதநீய கர்ம நாசத்தால் அவ்யாபாதத்வமும் உண்டாகின்றன. சித்த பகவான் கர்மங்களிலிருந்து வெளிப்பட்டதுமே மேலுக்குச் செல்லுகின்றார். சித்தர்களின் அவகாகன உத்கிருஷ்டம் 525 வில்லும் குறைந்த உயரம் 3 1/2 முழமாகும்.<br>

</p>

Previous Question Next