ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

101. பன்னிரெண்டு அனுபோகம் என்னென்ன?

பதில் :சித்தர்களின் ஸ்வரூபம் 12 வகையாகும்.

1. க்ஷத்திரம் : 2 1/2 தீபத்திலேயேதான் சித்தர்கள் ஏற்படுகின்றனர்.

2. காலம் : நாலாம் காலமாகிய தீ நற்காலத்திலும் எப்போதாவது மூன்றாங்கால அந்தியத்திலும் ஐந்தாங்கால ஆரம்பத்திலும் சித்தி ஏற்படுகிறது.

3. கதி : மனிதகதியில்தான் சித்தியடைய முடியும்

4. லிங்கம் : முனிலிங்கம் புல்லிங்கத்திலேயே சித்தி ஏற்படுகிறது.

5. தீர்த்த : சிலர் தீர்த்தங்கரராகியும் சில சாமான்ய கேவலியாகியும் சித்தியடைவர்.

6. சாத்ரம் : சிலர் ஒரு சாமாயிக சாத்ரத்தினாலேயே வேண்டியபடி பிரசித்த ஒழுக்கத்தாலும் சிலர் சாமாயிகசெதோபஸ்தாபனா சிலர் பாஹார விசுத்தியும், பெற்று அப்படிப்பட்ட கீர்த்திபெற்ற சாத்திர முடையவராகி சித்தராகின்றனர்.

7. சிலர்-பிறருடைய உபதேசமின்றி தானே அறிவடைந்தும் சிலர் உபதேசத்தால் அறிவடைந்தும் சித்தராகின்றனர்.

8. ஞானம் : சிலர் மதி சுருதி இரண்டறிவாலேயே கேவல ஞானியாகின்றனர். சிலர் அவதிக்ஞானத்துடன் மூன்றும் சேர்த்து கேவலியாகின்றனர். சிலர் மனப்பாயாய ஞானத்துடன் நான்கும் சேர்ந்து கேவலியாகின்றனர். சித்திடைகின்றனர்.

9. அவகாஹனா : சிலர் 525 வில் உயரமுள்ள சாரத்துடனும் சிலர் குறைந்த அளவு 3 1/2 முழ அளவுள்ள சாரத்துடன் சித்தி பெறுகின்றனர்.

10. அந்தர் : குறைந்தநேரம் ஒரு சமயத்தில் யாரும் சித்தி பெறுவதில்லை. உயர்ந்த பக்ஷம் 6 மாதம் வரை சிலர் சித்தி பெறுவதில்லை.

11. ஸங்கியா : ஒரு சமயத்தில் குறைந்தது ஒரு ஜீவனும், உயர்ந்த பக்ஷம் 108 ஜீவன்களும் மோக்ஷமடைகின்றன.

12. அல்பபகுத்வம் : க்ஷத்திரத்திலிருந்து சித்தியடைபவர்கள் அதிகமாகவும் சமுத்ரத்திலிருந்து முக்தியடைபவர் குறைவாகவுமிருப்பர்.

Previous Question Next