ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >100. கேவலி சமுத்காதத்தின் தன்மை என்ன?
</span><br>

<p><b>பதில் </b>: யார் அதிகபக்ஷம் ஆறுமாதம் ஆயுள் பாக்கியிருக்கையில் கேவலக் ஞானியாகிறார்களோ அவர்கள் முறையுடன்
கேவலி சமுத்காதம் செய்கிறார்கள். யாருக்கு அதிகமாக ஆறுமாத ஆயுள் உள்ளதோ அவர்கள் சமுத்காதம் செய்தாலும் செய்யலாம்
செய்யாமலுமிருக்கலாம். எப்போது ஆயுளின்நிலை அந்தர் முகூர்த்த முள்ளதோ அப்போது வேதனீய நாம, கோத்திர முதலிய மூன்று
கர்மங்களின் நிலை அதிகமாயிருப்பின் அம் மூன்றின் நிலை ஆயுளின் நிலையை சாசமமாக்குவதற்கு சமுத்காதம் செய்கிறார்கள்.
எவ்வாறு நனைந்த வஸ்திரத்தை விப்பதனால் சீக்கிரம் உலர்ந்து விடுகிறதோ, அவ்வாறே சமுத்காதத்தால் மூன்று கர்மங்களின் நிலை
குறைந்து விடுகிறது. எந்த கேவலி காயோத் சர்க்க ரூபமாய் நின்று சமுத்காதம் செய்கிறாரோ, அவருடைய ஆத்மபிரதேசம் விவடைந்து,
தண்டரூபத்துடன் ஒரே சமயத்தில் 12 அங்குல பிரமாணம், பொயவாத வலையத்தின் பருமனை விட்டு, சிறிது குறைந்த 14 ரஜ்ஜுவில்
பரவுகிறது. தண்டத்தின் உருவாகி விடுகிறது. உட்கார்ந்துகொண்டே சமுத்காதம் செய்வராகில், தேகத்தைப் போல் 3 மடங்கு
பொதாகி சிறிது குறைந்த 14 ரஜ்ஜு தண்ட உருவில் விகிறது. இரண்டாம் சமயத்தில் அதே பிரதேசம் கதவு போன்ற அமைப்பில்
விகிறது. வாதவலயத்தைவிட்டு கிழக்கு ஜுகதவாயமையும். வடக்கு திசைக்கு எதிரே இருக்குமானால் கிழக்கு மேற்கு கதவாய்
அமையும். நின்றுகொண்டிருந்தால் 12 அங்குலம் பருமனும், உட்கார்ந்திருந்தால் 3 மடங்கு பருமனும் பிரதேசமுள்ளது. மூன்றும்
சமயத்தில் கல்தோற்றத்தில் சர்வாத்ம பிரதேச வாதவலையத்தினின்று சர்வலோகத்திலும் விகிறது. நான்காம் சமயத்தில்
வாதவலையத்தையும் தாண்டி சர்வலோகத்திலும் பரந்து விடுகிறது. லோகம் நிறைந்து விடுகிறது. பின்னர் மாறுகிறது.
ஐந்தாம் சமயத்தில் கல்லுருவடைகிறது. ஆறாம் சமயத்தில் கதவு உருவம். ஏழாம் சமயத்தில் தண்ட உருவம், எட்டாம் சமயத்தில்
மூலதேக உருவாய் விடுகிறது.<br>
</p>

Previous Question Next