ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >1. கேள்வி : ஜைன தர்மம் என்பது யாது? ஜைனர் எனப்படுபவர் யாவர்? </span><br>
<p><b>பதில் :</b> எவன் சை, கோபம், மயக்கம் (ராக, த்வேஷ, மோஹம்) என்னும் முக்குற்றங்களை நீக்கி, பசி தாகம் முதலாகிய பதினெட்டு தோஷங்களை நிவர்த்தி செய்து ஞானாவரணாதி எட்டு கர்மங்களை நாசம் செய்து அந்த ஞானாதி குணங்களையடைந்து, சமவசரணாதி விபூதியைப் பெற்று சகல ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும்படி உபதேசம் செய்தானோ அப்படிப்பட்ட தர்மோபதேச மொழிகளாகிய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் (சம்யக்தா¢சனம், சம்யக்ஞானம், சம்யக்சா¡¢த்ரம்) என்னும் ரத்னத்ரயங்களைக் கடைப்பிடித்து நடப்பதே ஜைனதர்மம் கும். இதை குறைவில்லாமல் அனுஷ்டித்து நடப்பவனே ஜைனர் ஆவர்.</p>
 

Next