Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

அத்தினாபுயிலிருந்து புறப்பட்டு, நீலகேசி பல கல் தொலைவு நடந்து, காகந்தி நகரை அடைந்தாள். அங்கே வேத நெறியாளர் கலைக்கூடம் ஒன்றிருந்தது. அதில் பூதிகன் என்ற வேத ஆசியன் பல மாணவர்கட்கு வேதநெறி புகட்டிக்கொண்டிருந்தான். நீலகேசி வேதநெறி பற்றி வாதிட வந்திருப்பதாகச் சொல்லவே, அவன் மாணவர் புடைசூழ முன்வந்து அவளிடம் வாதாடினான்.

பூதிகன் : எங்கள் முதனூல் வேதம் ஆகும். அது காலங் கடந்தது; தானே இயங்குவது. வேதத்தை மூலமாகக் கொண்டு பல மெய்ந்நிலை விளக்க விளக்க முறைகள் ஏற்பட்டுள்ளன. 25 மெய்ந்நிலைகளைக் கொண்ட சாங்கியம், 6 பருப்பொருள்களை வித்துரைக்கும் வைசேடிகம், படிப்பு முறைகூறும் படைப்பு வாதம் (சிருஷ்டி வாதம்), கடவுள் இயல்புரைக்கும் கடவுள் வாதம் (பிரம வாதம்), பல தெய்வங்கள் பெயரையும் கொள்கைகளின் பெயரையும் ஒட்டி ஏற்பட்ட, வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாஞ்சராத்திரம், பாவிராஜிகம் முதலிய முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றிலும் உட்கிளைகள் பல. இவை எல்லாமே வேதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை.

நீலகேசி : உங்கள் வேத நெறி அல்லது மீமாம்சக வாதம், கடவுள் மறுப்பு (நாத்திகச் சார்பானது; எல்லாமறிந்த தலைவரை ஏற்பதன்று. ஆயினும், கடவுளையும் சிறு தெய்வங்களையும் வழிபடும் பல நெறிகளுக்கு அதனைத் தாயகமெனக் கொள்கிறாய். பிந்தியவை சிறந்ததென உங்களுக்குத் தோன்றினால், உங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை வாய்ந்த வேத நெறியை விட்டுவிடுவதுதானே?

பூதிகன் : (கடுஞ்சினத்துடன்) யாரைக் கடவுள் மறுப்பாளர் என்றாய்! எங்கள் வேதம் யாவராலும் உரைக்கப்பட்டது அன்று (அபெளருஷேயம்) என்ற நிலையை உன்னால் அறியப்பட முடியாது. அதனைக் கற்கும் தகுதி சூத்திரச்சியாகிய உனக்கு இல்லை. அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்க உரிமை ஏது?

நீலகேசி : நன்று சொன்னாய். நால்வகுப்புக்குப் புறம்பான சண்டாளர்கள் (பஞ்சமர்) கூட உங்கள் வேதமொழிகளை உரைத்திருக்கும்போது, அதனை அறிய ஒரவரக்குத் தகுதி இல்லை என்றுகூற வெட்கமில்லையா? வேதங்களை வகுத்தும் மந்திரந் தந்தும், முனிவர்கள் என்று உங்களால் கொள்ளப்பட்ட வசிட்டர், அகத்தியர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் ஆகியவர்கள் பிறப்பையும் மரபையும் ஓர்ந்து பார்க்க வேண்டும். வசிட்டரும் அகத்தியரும் நான்முகனுக்குத் தேவருலக நடனமாதான திலோத்தமையிடம் பிறந்தவர்கள். சக்தி வசிட்டருக்குச் சண்டாளமாதொருத்தியிடம் பிறந்தவர். பராசரர் சக்தி மகன். வியாசர் பராசரருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர். வியாசர் தம் மூதாட்டியான திலோத்தமையிடம் பெற்ற பிள்ளை சுகர். இத்தகைய உயர் பிறப்பாளர் மொழிகளுக்குத் தெய்வத்தன்மை கற்பித்த நீங்கள், என் நல்குடிப் பிறப்பை இழித்துரைப்பது நகைக்குரியது.

பிறப்பால் உயர்வு இழிவு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பெயர்களையே எடுத்துக்கூறி, அவர்களை மேம்பாடடையச்செய்தது தவமே என்று உங்கள் நூற்களே கூறுவதை நீங்கள் உணரவில்லை.

பூதிகர் : சா போகட்டும். நீ வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறாய். தெய்விகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதேனும் குறை காட்ட முடியுமா?

நீலகேசி : ஏராளமாகக் காட்டமுடியும். அவை மனிதர் வாய்மொழி என்பதற்கு அவையே சான்று பகர்கின்றன. அவற்றுட் பல நடைமுறைக்கு ஒத்து வாராதவை. பொய்யுரைகள் மலிந்தவை. அத பிற்காலத்தது என்பதற்கான தெளிவுகளுண்டு. கீழ்வகை உலக அவல்களையே அவை வற்புறுத்துகின்றன. தீநெறிக்கு ஊக்குகின்றன. கொடுமை, கீழ்மை அகியவற்றுக்குத் துணை தருகின்றன.

பூதிகர் : இவ்வுரைகள் எவ்வாறு பொருந்தும்?

நீலகேசி : மனிதர் வழங்கும் மொழியில் பிற நூற்களிற் காணப்படும் அதேவகை பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்பதற்கான சிறப்புப் பண்பு எதுவும், இல்லாதிருப்பதனால் அது மனிதர் ஆக்கிய நூலே. தெய்வமே மாந்தர் நாவில் நின்று கூறியது எனக் கொண்டால், வேதமட்டுமென்ன, எல்லா நூல்களும் தெய்வத் தன்மை மிக்க ஆன்றோர் நாவில் தோற்றியதேயாகும். மேலும் வேதங்களைப்பற்றிக் கூறுகையில், பிருகதாரணிய உபநிடதம் பொயோர்களால் கூறப்பட்டது. (மஹாதோ பூதஸ்ய நிஸ்வாஸிதம்) என்றே குறிப்பிடுதல் காணலாம். வேதங்களில் ஒன்று தித்தியால் கூறப்பட்டதாதலால், தைத்திரி எனப்பட்டது. இதுவும், ஓர் ஆசியன் அருளியது எனக் கூறுகிறது. தித்தி என்ற மனிதர்கூட அதே நூலில் குறிப்பிடவும் பெறுகிறார்.

பூதிகர் : வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப்பட்டன : ஆதலால், வேதங்கள் தொடக்கமற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது.

நீலகேசி : தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப் பொருந்தாதவை. இந்திரனும் சூயனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்கிவரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல் ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம்விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழியாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞான காண்டத்தில்) எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்ம காண்டத்தில்) வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு யானை பாசு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர்சனகாடம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில் மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளானும் கீழ்நிலையடைகிறது வேளாண் செல்வன் ஒருவன், தன் புதல்வருள் ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செயல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக உங்கள் சமயநூல்களே கூறுகின்றன.

உங்கள் மறை நூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம்ஆகியவற்றை ஆதாக்கின்றன. செளத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சாக்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையும் ண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம் தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற்படுகின்றன. எடுத்துக்காட்டாக 'அஜேநயஷ்டவ்யம்' என் தொடால் அஜம் என்பதனை ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொரு சாராரும் பொருள்கொள்ளும் படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபாசரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபாசரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிருகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக 'மாவிலங்கு' செய்யும்படி கூறுவது கேட்டு, ஊனுண்ணும்; விருப்புடன் வேள்விக்கு வந்த 'தேவர்கள்' வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதாக்க, இருவாடையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச்சான்றுமீறித் தேவர்புறம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் 'மா அசி' முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில் செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறுக்கக் கூடியதாயிருத்தலும் அதை நீங்கள் வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக்கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

பூதிகர் : நீங்கள் உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங் காட்டுவதானால் உங்கள் இறைவனாகிய அருகன் அதில் குறிப்பிடப்பட வேண்டும்!

நீலகேசி : ஆம் : இருக்கு வேதத்திலேயே,

"Arhan Bibarshi Sayakani Danvan
Arhantu Viswaroopam
Arhat Brahmi
Arha Eva Itham Sarvam
Eth Bootham Yach Abavyam
Ya Yevam Veda".

முதலிய வாசகங்கள் உள்ளன. இதேபோன்று வாய்மொழி (ஆகமங்கள்) அருளிய இறைவன் நிறையறிவினன் என்று சமணர் கொள்வதுபோலவே வேதங்களும்,


"Savetti Viswam Na Hi Thasya Vetta Thamahu ragriyam Purusham
Mahantam and Hiranyagarbasarvagnaha"

என்று கூறுகின்றன.

எல்லா மக்களும் நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள், உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல் இழிவும் ஆம் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலேயே உயர்வு தாழ்வு ஏற்படுமா? மேலும் உங்கள் நூல்களிலேயே திருமால் தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும் காலில் பிறந்த கங்கை தூயதாகவும்; உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மது கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறதே.

வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள், உங்கள் கொலைவேள்விக்கே இடம் தேடுகிறீர்கள். வேதங்களை முன்னோர்கள் நூலாகமட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம்.

நீலகேசியின் சொற்கள் பூதிகன் உள்ளத்திலும், அவன் மாணவர் உள்ளத்திலும் பதிந்து அவர்களைத் திருத்தின. அவர்கள் கொல்லாநெறி மேற்கொண்டு அப்பழ அறநெறியில் நிற்கத் தொடங்கினர்.

வேத வாதம் - உரை முற்றும்

Previous Next Top