Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

புத்த சமயத்தைத் தோற்றுவித்த முதல்வரான புத்தபிரான் கடற்கரையோரமுள்ள கபிலபுரத்தில் வாழ்ந்து வந்தார். (உணவுக்கு மீன் எளிதில் கிடைப்பதற்காகப் புத்தர்கள் கடற்கரையோரமே மடங்கள் அமைப்பர் என்று இங்கு ஏளனமாகக் குறிப்பிடப்படுகிறது. ஊன் விலைஞரும் உயிர்கொலைஞரும் அடுத்துத் தொழிலிடங் கொண்டிருந்தனர் என்பது குறிக்கப்படுகிறது). அவர் அரசர் மரபினராயிருந்ததற்கேற்ப, அவர் தங்கிய மடம் அரண்மனைக் கொப்பானதாகவேயிருந்தது. அவர் ஓர் உயர்ந்த தவிசின் மீதமர்ந்து, தம்மைப் புடைசூழ்ந்திருந்த தம் திருச்சபை மாணவருக்குப் புத்தநெறியை விளக்கிக் கொண்டிருந்த சமயம், நீலகேசி அவரைச் சென்று கண்டாள். நீலகேசி விருப்பத்திற்கிணங்கப் புத்தபிரான் தம் நெறியின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கினார்.

புத்தர்பிரான் : மெய்ம்மையின் அடிப்படைத் தத்துவங்கள் ஐந்து கந்தங்களாக வகுக்கப்படும். அவை உருவ கந்தம் (மூபம்) உணர்ச்சிக்கந்தம் (வேதனை) அறிவுக்கந்தம் (விஞ்ஞானம்) பெயர்க்கந்தம் (சம்ஜ்ஞா) செயற்கந்தம் (சமஸ்காரம்) என்பவை.

உலகின் பொருள்கள் அனைத்தும் உருவகந்தத்தைச் சார்ந்தவை. அப்பொருள்கள் எட்டினங்களாக (அஷ்டகம்) அறியப்படும். அவையாவன: மண், நீர், காற்று, அனல் ஆகிய மூலப்பொருள் (பூதங்)களும் அவற்றுக்குச் சரியான பொறியுணர்ச்சிகளாகிய நிறம், சுவை, மணம், ஊறு ஆகியவைகளும் ஆம். இவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாத ஒரே தொகுதியாக எட்டினம் எனப்படும். மூலப்பொருள்களின் பண்புகள் முறையே திட்பம், நெகிழ்ச்சி, வெப்பம், சுழற்சி ஆகியவை. அவற்றின் செயலும் நால்வகைப்படும்.

உணர்ச்சிக்கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகைப்படும். அறிவுக்கந்தம், பொறி அறிவு ஐந்து, மன அறிவு ஒன்று, ஆக ஆறு அறிவுகளையும் பகுதிகளாகவுடையது. பெயர்க்கந்தமும் இதேபோல ஆறு வகை. செயற்கந்தம் மனமொழி மெய் என மூவகை.

இக்கந்தங்கள் கணந்தோறும் தோன்றி மறைவன. (பல தனிப்படங்கள் விரைவாக ஓடித் திரைக் காட்சியில் தொடர்ச்சி காட்டுவதுபோல) அவை தொடர்ச்சியுடையவைபோலத் தோற்றுதல் மயக்கமே. உண்மையில் எல்லாப் பொருள்களும் நிலையற்றனவே.

ஐந்து கந்தங்களின் சேர்க்கையையே ஆன்மா என்பதன்றி, ஆன்மா அல்லது உயிர் என்ற ஒன்றில்லை. கண வாழ்வும் அழிவுத் தன்மையுமுடைய இக்கந்தங்கள் நிலையாமை, துன்பம், தூய்மையின்மை, உயிர்ப்பின்மை (அனாத்மா) ஆகிய இயல்புகளை உடையன. இவற்றின் இயல்பை உணர்ந்தவன் உலகத்தோற்ற (சம்சார)த்தின் தன்மை உணர்ந்து துறக்கம் அல்லது வீடு (நிர்வாணம் அல்லது மோக்ஷம்) அடைகிறான்.

நீலகேசி : ஐந்து விரல்கள் சேர்ந்த கைபோலும், செங்கல் முதலிய பொருள்கள் சேர்ந்தமைந்த வீடுபோலும் கந்தங்கள் சேர்ந்ததே மெய்ம்மை (உலகு) என்கிறீர்கள். ஆனால் கந்தங்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க ஒண்ணாதவை; ஒருங்கே கணந்தோறும் தோன்றிக் கணந்தோறும் அழிபவை என்று கூறுகிறீர்கள். விரல்கள், வீட்டுக்கான பொருள்கள், இவ்வகையில் பொருத்தமான உவமைகள் அல்ல. ஏனெனில் அவை தனித்தனி இயங்கவோ தோன்றவோ அழியவோ கூடும். கந்தங்கள் கூட்டாகவோ இயங்குவதற்கும் அழிவதற்கும் அவற்றைப் பிணைக்கும் அடிப்படை இணைப்பு இன்றியமையாதது. இதனை ஏற்றால், ஆன்மாவை ஏற்றதாகும். இக்கந்தங்கள் அத்தகைய ஆன்மாவின் பண்புகளேயாகும்.

நாலு முதற்பொருளைக் கூறுகையில் அவற்றின் பண்பும் செயலும் குறித்தீர்கள். பொருளினின்று வேறாகப் பண்பும் செயலும் பொருளாவது எங்ஙனம்? பிற கந்தகங்களையும் பிரித்தறிய அறிவு வேண்டும். பொறியுணர்விற்கு அடிப்படையான மண்ணை ஏற்கும்போது, உணர்ச்சி முதலிய கந்தங்களுக்கு அடிப்படையான உயிரை (ஆன்மாவை) ஏற்காததேன்?

புத்தர் : நாங்கள் ஏற்பதெல்லாமே பண்புகள்தான்; பொருள்கள் அல்ல.

நீலகேசி : அப்படியானால் பண்புகளே பொருள்களாயின. அவற்றின் செயல்கள் பண்புகளாகும். பொருள் பண்பு உறவு ஏற்பட்டுவிடுகிறது. நீங்களோ அத்தகைய உறவை ஏற்பதில்லை.

புத்தர் : பண்புகளல்லாது பிண்பி (பொருள்) ஒன்றிருப்பதாகக் கொள்வதேன்? அதனை அறியமுடியுமா?

நீலகேசி : பிரிந்தியங்களோ பிரித்துணரப்படவோ முடியாத காரணத்தால் பொருளில்லை என்றாக முடியாது. உணர்ச்சி முதலிய கந்தங்களின் அடிப்படையாக உயிர் நிலை அல்லது அறிவவுநிலை (போதம்) இருக்கவேண்டுவது விலக்க முடியாத உண்மை.

மேலும் கந்தங்கள் பிந்தியங்காதென்றால், ஒன்றுக்கொன்று மாறான தீ, நீர், ஆகியவை ஒருங்கே இயங்கம் என்ற முரண்பாடு ஏற்படுகிறது.

ஒவ்வொரு மூலப்பொருளிலும் மற்ற மூன்றும் கலந்துள்ளன என்கிறீர்கள். அப்படியானால் அக்கலவை மூலப்பொருளிலும் அத்தகைய கலப்பு இருக்கவேண்டும். அக்கலப்பிற் கலந்துள்ள கலப்பிலும் அதனுட் கலப்பிலும் அவ்வாறாகி எல்லையற்ற குழப்பநிலை ஏற்படுகிறது. மூலப்பொருள் என்பதற்குப் பொருளே இல்லாமலாகிறது.

புத்தர் : அப்படி அன்று. ஒவ்வொரு மூலப் பொருளிலும் தன் பண்பு மிகுந்து, பிற பண்புகள் குறைந்து இயல்கின்றன.

நீலகேசி : மிகுதிப் பண்புக்குமுன் குறைந்த பண்பு அழியும். அப்படியும் அவை ஒத்தியங்குதல் அது. மேலும் பொறியாலுணரப்படும் எட்டினப் பொருள்கள் அங்ஙனம் உணரப்படாதவற்றுடன் இயங்குவதெவ்வாறு? தவளையின் காற்சுவடு காற்றில் இருப்பது போலன்றோ இந்நிலை? அறிவு செயலுக்கும், செயல் இன்ப துன்பங்களுக்கு இடமாகும் என்கிறீர்கள். அறிபவன், செய்பவன், நுகர்பவன் ஆகிய ஆன்மா இல்லை என்கிறீர்கள். அப்படியானால் இம்மூன்றும் தொடர்பற்றவையாகவன்றோ இருக்க வேண்டும். ஒன்று மற்றதற் கிடமாவது எவ்வாறு? அறிவுக் கந்தம்ம ஆறனுள் ஒரே நேரத்தில் ஒன்று தானே உணர்விலிருத்தல் கூடும்? மற்றவை மறைவிலுள்ளனம என்னின், மறைவில் வைத்துள்ள உள்ளம் அல்லது ஆன்மாம ஒன்றும இருத்தல் வேண்டுமன்றோ?

அறிவுக்குக் காரணம் விருப்பம் (இச்சை) என்கிறீர்கள். விருப்பம் அறிவுக்கும முந்தியதாகவே அது எங்கிருந்து எழுகிறது என்ற வினா ஏற்படுகிறது. உடலிலிருந்து என்றால் அறியாப் பொருளி (அசேதனத்தி)லிருந்து வந்த தென்றாகிறது. அது அறிவினின்று எழுந்ததாயின் காயமே காரணமாகின்றது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக உள்ளுறை அறிவும என்ற ஒன்றைக் கொள்கிறீர்கள். ஆனால் அது ஆன்மாவிற்கு ஒரு மறுபெயரேயன்றி வேறன்று. புத்தக் கோட்பாட்டின்படி பொறியுணர்ச்சிகளுள் மணம், சுவை, ஊறு மூன்றும் பொறிகள்மீதுபொருளுலகு தாக்குவதால் ஏற்படுகின்றன என்பது ஒத்துக்கொள்ளப்படுகிறது. நீலகேசி ஓசையும் அத்தகைய தாக்குதலாலேயே ஏற்படுகிறது. என்றும விளக்கினாள். (இது தற்கால அறிவியல் கொள்கையை வியத்தகு முறையில் நினைப்பூமட்டுவதாகும்) ஒசை காற்றணுக்களினியக்கத்தால் உண்டாவதென்றும் அது ஒளியினும் வேகம் குறைந்ததென்றும் கூறி, அதனை எடுத்துக்காட்டினால் விளக்குகிறாள். வண்ணான் துணி தப்பும்போது அவன் செயலைக் கண்கொண்டு பார்ப்பவருக்கு அச்செயலைப் பார்த்தபின் சிலநொடிகள் கழித்தே அதனுடன் ஏற்படும் ஓசை செவியிற்படும். மேலும் கட்புலனுதவியின்றியே ஓசையின் அண்மை தொலைவுகளையும் வரும் திசையையும் உய்த்துணரலாகும்.

நொடிக் கோட்பாட்டின் முரண்பாட்டையும் நீலகேசி நன்கு விளக்கினாள். நொடிதோறும் பொருள்கள் அழிந்து மாறுவதானால் புத்தர் என்ற பெயரைச் சொல்வதற்குள் பல நொடிகள் ஆகி, ஒரு நொடியில் கேட்ட உணர்வு அழிந்து, பின் மறுநொடி உணர்வு ஏற்படும. தொடர்ச்சியுமிராது, தொகையாகக் கேட்ட கேள்வியுணர்வுமிருக்க முடியாது என்று அவள் காட்டினாள்.

நீலகேசி : ஓசை என்பது பொருளன்று; போலித் தோற்றம் என்கிறீர்கள். ஓசைகளால் ஏற்பட்ட உங்கள் பிடக முதலிய நூல்களும், ஓசை வாயிலாகச் செய்யப்படும் உங்கள் அறிவுரைகளும் என்னாவது!

அறிவுக் கந்தமும் பெயர்க்கந்தமும் ஒரேவகைப் பொருள் குறிக்கின்றன. இரண்டுக்கும் புலனாவது ஒரு பொருளாயின், அவை இரு பொருள்கள் ஆகா. ஒரு பொருளாயின் அறிவுக் கந்தம் பொருளற்றதாகிறது.

செயற் கந்தத்தில், அவா, வெகுளி, மயக்கம் ஆகியம மனத்தின் செயல்களும், பொய், குறளை, இன்னாச்சொல், பயனில் சொல் ஆகிய மொழியின் செயல்களும், கொலை, களவு, காமம் ஆகிய உடற் செயல்களும் கூறப்படுகின்றன. இப் பத்துத் தீமைகளுள் குடியும் பேரவாவும் இடம்பெறாதது ஏன்? மேலும் அவா தீமையாகுமானால், புத்த துறவியர் குடை, மிதியடி, குண்டிகை ஆகியவை வைத்துக்கொள்ளல தகாதன்றோ? மெய்யறிவுடன் நோக்கினால் அவவாவனைத்துமே தீமை என்று கூறுவதற்கில்லை. அது நன்மையாவதும் தீமையாவதும் அவாவிய பொருளின் தன்மையை மட்டுமே பொருத்தது. வெகுளியோடு எவ்வகையிலும் ஒப்பாகும் செருக்கு, மயக்கம் (மாயை), சிறுமை (லோபம்) ஆகியவற்றையும் தீமைகளாக எண்ணத் தவறிவிட்டீர்கள். உம் வாழ்க்கை வரலாற்றிலேயே இத் தீமைகளை அகற்றப் பாடுபட்டிருந்தும், உங்கள் சமயக் கோட்பாட்டில் இவற்றைக் கவனிக்காது விட்டுவிட்டீர்கள். மொழிச் செயல்களிலும் தீமை பயக்கும் மெய்ம்மை, புறங்கூறாது நோடையில் இழித்துரைத்தல், ஆகியவற்றை நீங்கள் ஒதுக்கத் தவறிவிட்டீர்கள். மேலும் தீமைகளை மன மொழி மெய் என முற்றிலும் பிரித்ததும் வழுவாகும். எல்லாத் தீமைகளிலும மனத்தின் செயல் உண்டு என்பது தெளிவாக்கப் படவில்லை.

கொலைக் குற்றத்திற்கு ஐந்து கூறுகள் தெளிவுபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். செயலுக்காளானது உயிருடைய பொருளாயிருக்க வேண்டும்; உயிருடைய தெனச் செய்பவர் அறிந்திருக்க வேண்டும். கொல்லும் எண்ணம், கொலைச் செயல், ஆளான உயிர் இறத்தல் இத்தனையும் இருத்தல் வேண்டும். இவ்வைந்தில் எக்கூறு குறைபாட்டிலும்ம கொலைக் குற்றம் இல்லை என்கிறீர்கள். எனவே, நடைமுறையில் வெற்றிபெறாத கொலை முயற்சிகூடக் கொலையாகாது என்மறாகிறது. ஆனால் உங்கள் நூமலில் காந்திபாலன் (க்ஷந்திபாலன்) என்ற துறவியைக் கொல்லமுயன்ற மன்னன் கலாகன் (கலாஹன்) நரகு மசென்றதாகக் கூறப்படுவானேன்?

உங்கள் பேரறவுரை (மகாவாக்கியம்) நான்கனுள், எல்லாமே துன்பம் (சர்வம் துக்கம்); எல்லாமே தூய்மையற்றவை (சர்வம் அசுசி); எல்லாம் நிலையாதவை (சர்வம் அநித்யம்); எல்லாம் உயிரல்லாதவை (சர்வம் அனாத்மா) என்ற நான்கு உண்மைகள் கூறப்படுகின்றன. முதல் உரையின்படி நீங்கள் வற்புறுமத்தும் நல்லறமும் நற்பயன் அற்றதாகும். இரண்டாவதன்படி உங்கள் மறை, போதிமரத்தடி முதலியவையும் தூய்மையற்றவையாக வேண்டும். மூன்றாவது வாழ்க்கைக் கொவ்வாதது. நொடிதோறும் எல்லாம் அழிவது உண்மையானால், அரசன் உடமைகளைப் பறிமுல் செய்யும்போதோ, வெள்ளம் முமதலியவற்றால் அழியும்போதோ, வருந்துபவர் நொடிதோறும் வருந்தாததேன்? மேலும் சமயத் தலைவராகிய நீங்களும் மறையும் நிலைப்பதெவ்வாறு? கடைசி உரைக்கு மாறாக நீங்களே உயிர், மறுபிறப்புப் பற்றிப் பேசுகிறீர்கள். அது வெறும் உலகியல் வழக்கு (வியவகாரப் பிரயோகம்) ஆனால்கூட உங்கள் பழைய நினைவுத் தொடர்ச்சி (பிரத்தி பிஜ்ஞை)க் கொள்கையுடன் அது ஒத்துவாராது

மெய்ப் பொருள்களை, நாம் அவற்றின் பெயர் (நாமம்) உருவம் (ஸ்தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல்வகை (பாவம்) ஆகிய நாலு வகைகளால் அறியலாம். நீங்கள் கடைசிவகை ஒன்று மட்டுமே ஒப்புக்கொள்கிறீர்கள். முதல் மூன்றுவகைகளாலும் மட்டுமே ஆன்மா தெளியப்படும். வான்மலர் போன்ற தொடர்கள் இல்பொருள் குறிக்கின்றனவே எனின், வான், மலர் என்ற இரண்டும் உள்பொருள்களே என்றும், இல்பொருள் என்பது தொடான் முரண்பாடு என்றும்ம காட்டலாம். பொருள் குறித்தே பெயர் எழுமாதலால், பெயர் பொருளின் அறிகுறியேயாகும்.

வினைப்பயன், வினையுலகு (சம்சாரம்) வீடுபேறு ஆகியவற்றை ஏற்கும் புத்தநெறியாளர் இவற்றுக்கு அடிப்படைமயான உயிர்நிலை (ஆன்மா) உண்டென்பதை மறுப்பது பொருத்தமற்றது என நீலகேசி கூற, அதை மறுக்கப் புத்தர்பிரான் கூறிய உவமைகள் பலவற்றுள்ம பொருத்தமின்மையை அவள் விளக்கிக் காட்டினாள். மேலும் வீடுபேறு என்பது வினை உலகுத் தொடர்பு அறுவதேயாயின், நொடிதோறும் அழிந்து புதிதாகும் உலகில், வீடுபேறுதான் நொடிதோறும் நிகழும் செய்தியாயிற்றே என்று நீலகேசி ஏளனம் செய்தாள். நொடி மாற்றுக்கொள்கையும் மாறுதலின் கொள்கையும் தவறு என்றும், உள்ளார்ந்த நிலைமையுமாகிய தொடர்ச்சியினிடையே மாற்றமாகிய நடுநிலைக் கொள்கையே நேர்மையுடையதென்றும் அவள் விளக்கினாள்.

நீலகேசி அறிவின் திறத்தைக் கண்டு வியந்து, புத்தருடைய குறைபாட்டை ஒப்புக்கொண்டு, இனி அவள் கூறிய உண்மைகளை ஏற்பதாகக் கூறினார்.

புத்த வாதம் - உரை முற்றும்

Previous Next Top