Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

அர்க்க சந்திரன் உச்சயினி நகால் வாழ்ந்தான். அவன் சொற் போல் புலி எனக் கருதப்பட்டான். நீலகேசி அவனை அடைந்து வாது தொடங்கினாள். வாதப்பொருள் புத்தர் வினயபிடிகத்திற் கண்ட ஒழுக்க முறை பற்றியதாயிருந்தது. புத்தசமயக் கொள்கைகளுக்கும், புத்த சமயத்தைப் பின்பற்றியவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைக்கும், இடையிலுள்ள பெருத்த வேற்றுமையை நீலகேசி எடுத்துக்காட்டினாள். கொள்கைகளுள் சில நடைமுறைக்குக் கொண்டுவரத் தக்கவையாகக்கூட இல்லை. புத்தர் பிறப்புக் கதைகள் (ஜாதகக் கதைகள்) பலவற்றில் போதிசத்துவர் தம் மனைவியையும் மக்களையும் கூட இரவலருக்குக் கொடுத்திருக்கிறார். இதிலிருந்து இரவலர் கேட்டதையெல்லாம் கொடுப்பதே உயர் நெறி என்று கொள்ளப்பட்டதாகத் தொகிறது. ஆயினும் தெளிந்த அறிவுடைய எந்தப் புத்தரும், இன்று இக்கொள்கையைப் பின்பற்றித் தம் மனைவியை ஆண்டி ஒருவன் கேட்டால் கொடுப்பான் என்று எதிர்பார்க்க முடியாது.

அடுத்தபடியாகப் புத்த சங்கத்தில் புகுந்துள்ள பல புதிய பழக்கங்களை நீலகேசி எடுத்துக்காட்டினாள். சங்க தத்த ஸ்தவிரன் என்ற புத்த மடத்துறவி புத்த கோட்டத்தில் ஒரு பெண் துறவியைக் கண்டு அவளைத் தன்னுடன் கூடியிருக்குமாறு அழைத்ததாகக் கூறப்படுகிறது. பெண் துறவி, கோட்டம் தூய இடமாயிற்றே; இச் செயலுக்கு இவ்விடம் ஏற்றதல்ல என்றாளாம். சங்கதத்தன்; துறவியர்க்குக் கோட்டமும் வீடும் ஒரே நிலையையுடையவைதான் என்று ஒழுங்கு கூறி யமைந்தானாம். இன்னொரு துறவி, ஒரு பெண்ணின் இறந்த பிணத்தைத் தழுவினான். இது கண்டு கடிந்த ஒருவாடம், அவன் பிணத்துக்கும் உயிருள்ளவர்க்கும் இடையே அறிஞர் காணும் வேறுபாடு யாது? ஒன்று பிணமாய் விட்ட உடல்; மற்றொன்று பிணமாக இருக்கும் உடல். வேற்றுமை அவ்வளவுதானே என்றானாம். (இன்னோரிடத்தில் துறவி யொருவன், பெண் துறவி ஒருத்தியை இணக்குவிக்கையில் சிற்றின்பம் சமயத்துக்கு எதிரான தீமையன்று; மக்கள் வாழ்க்கைக் குழுவின் (சமூகத்தின்) கருத்துக்கு மாறானது மட்டுமே மக்களுக்குத் தொந்து அவர்கள் புண்படாத வகையில் நடந்தால் துறவியர்க்கு இழுக்கொன்றுமில்லை என்று பேசினான். இங்ஙனம் புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளும் மனித ஒழுக்கத்தின் அடிப்படை ஒழுங்குகளும் பல வகையில் சமய நூல்கள் மூலமே புறக்கணிக்கத் தூண்டுதல் தரப்பட்டிருக்கின்றன. ஒழுங்குகளைத் தளர்த்தி ஒழுங்கின்மையைத் தூண்டும் இத்தகைய தெளிவான விலக்குகள் பதினெட்டை நீலகேசி எடுத்துக்காட்டினாள்.

மேலும் துறவினை மேற்கொள்வதாகக் கூறிக்கொள்ளும் புத்த துறவிக்கு, எத்தனையோ ஆடையணி வகைகள் உரிமையாக்கப்படுவது பொதுத்தமற்ற செயல். புத்தசமயம், எல்லா உயிர்களுக்கும் அருளும் அன்பும் காட்ட வேண்டும் என்று கூறுகிறதாயினும், ஊனுண்ணலுக்குப் பக்க மேளம் கொட்டுகிறது. வீடு பேற்றுக்கு வழி, ஒழுக்கமே என ஒருபால் பறை சாற்றுகிறது; மறுபால் பாழ்க்கோட்பாடு (சூனியவாதம்) பேசி ஒழுக்கத்தின் அடிப்படையான உயிர் (ஆத்மா) இப் பொருள் என்று கூறுகிறது. எல்லாப் பொருள்களும் மலமுடையவை என்று கூறினும், புத்தர் சிலைக்கு மலரும் பூசையும் தரப்படுகின்றன. எல்லாப் பொருள்களும் கணந்தோன்றி மறையும் நிலையாமை உடையவை என்று கூறிக்கொண்டே பாய கோயில்களும் மடங்களும் எழும்புகிறது. உயிர்த்தொடர்பும் மறுபிறப்பும் மறுக்கப்படுகின்றன; புத்தர் பிறப்புக்களில் மேற்கொண்ட விலங்கு, பறவையுருக்கள் வணங்கப்படுகின்றன. இங்ஙனம் வழிபடப்படும் இத் தெய்வ உயிர்களும், பசிக்கு உணவாகப் பயன்படுவதில் குறையில்லை.

இக் குளறுபடிகளைக் கேட்டு அர்க்க சந்திரன் மனங்குழம்பிப் புத்தசமயத் திட்டங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டான். புத்தர் பேசும் கொல்லாமையும் ஒழுக்கநெறியும் வாய்ப்பசப்பே என்பதை உணர்ந்து நீலகேசியால் அருளுரைக்கப்பட்ட சமண அறத்தை மேற்கொண்டு அவனும் சமண அறத்தின் மும்மணிகளை வழிகாட்டியாகக் கொண்டு உய்ந்தான்.

அர்க்க சந்திர வாதம் - உரை முற்றும்

Previous Next Top