Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

ஜின பகவன் கோயிலை வலம் வந்து வணங்கிய பின், நீலகேசி தான் அடைந்த புதிய அற நெறியாகிய சமண சமய நெறியை எங்கும் பரப்பும் எண்ணங் கொண்டவளாய், முதலில் புத்தாடம் வாதிடுவதென்று தீர்மானித்தாள். இம்முடிவுக்குக் காரணம் புத்த நெறியினர் அக்காலத்தில் ஊனுண்பதை ஆதாத்து ஊக்கியும், உயிர் (ஆத்மா) இல்லை என்று மறுத்தும், சமயக்கோட்பாடுகளைப் புறக்கணிந்தும் வந்ததேயாம். முனிவாடமிருந்து அவள் பெற்ற அருள் திறத்தால் புத்த நெறி பரப்பி வந்தவர்களுள் சிறந்தவள் குண்டலகேசி என்றறிந்து, அவளிடம் வாதிடச் சென்றாள்.

அச் சமயம் குண்டலகேசி தென் பாஞ்சால நாட்டின் தலைமையிடமான காம்பிலி நகரில் வாழ்ந்து வந்தாள். அங்கே சமயப் போருக்கு அனைவரையும் அழைக்கும் அறிகுறியாக ஓர் மரத்தடியில் தருக்குடன் வீற்றிருந்தாள். அவளிடம் வாதிடும் துணிவும் இன்றிப் பணியும் விருப்பும் இன்றி அரசனும் மக்களும் அவள்முன் வாராது ஒதுங்கியிருந்தனர். அவளிடம் கொண்ட அச்சத்தால் நகர் ஒளியிழந்திருந்தது. நீலகேசி வாயில் காப்போன் மூலம் அரசனிடம் குண்டலகேசியின் அழைப்பைத் தான் ஏற்பதாக அறிவித்ததும், அவன் அகமகிழ்ந்து மக்களனைவரையும் திரட்டிக்கொண்டு வந்தான். அரசன் நடுவனாயிருந்து சொற்போர் தொடங்குவித்தான்.

குண்டலகேசியின் விருப்பத்திற்கிணங்க வெற்றி தோல்விகளுக்கான பாசும், ஒறுப்பும் முடிவு செய்யப்பட்டன.

குண்டலகேசியே அவள் தன் சமய உண்மைகளை வரையறுத்துக் கூறும்படி நீலகேசி கேட்க, அவள் கூறத் தொடங்கினாள்.

குண்டலகேசி : எங்கள் சமயத்தின் அடிப்படை உண்மைகள் மரபுரை (ஆப்தம்) தெய்வமொழி (ஆகமம்) பொருள் விளக்கம் (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை.

எங்கள் சமயத்தின் தலைவர் புத்த பகவான். அவர் பரம்பொருள். உலகின் தொடக்க கால முதலிலிருந்து என்றுமுள்ளவர். ஊழி பேடூழியாக (கற்ப கற்ப காலமாக) உலக வாழ்வில் புகுந்து வாழ்ந்து தம் நலம் என்ற எண்ணம் சிறிதுமின்றி உலகுயிர்களுக்குப் புத்தநெறியை ஊட்டியவர் அவர். அவர் அருளிச் செய்த மூன்று பிடகங்களே (மறைகளே) எங்கள் முதல் நூல்கள்.

நீலகேசி : புத்த பகவான் தொடக்க முதலே முழுநிறைவுடைய பரம் பொருளானால், நூறாயிரம் பேடூழிகளாக அவர் உலகவாழ்வில் ஈடுபட்டுத் திரிவானேன்? தொடக்க முதலே அவர் நிறைவுடையவரானால், அவ்வீடுபாட்டின் பயன் யாது? வாழ்க்கையீடுபாடு, முன்வினையின் பயன் ஆகும். அவர் ஈடுபாடு எவ்வினையின் பயன்? அது முன்வினையின் பயனானால் அவர் தொடக்கத்திலேயே நிறைவுடையராதல் எவ்வாறு? அவர் தம் நலம்பற்றிய கருத்தேயின்றி, உலக நலத்துக்காகவே இங்ஙனம் ஈடுபட்டார் என்றால், அதை ஏன் தொடராது நிறுத்தினார்? கோடிக்கணக்கான உயிர்களை உழலவிட்டுத்தான் மட்டும் வீடு (நிர்வாணம்) பெறுவானேன்.

உயிர்கள் எல்லாவற்றின் நலத்துக்காகவே மூன்று பிடகங்களையும் புத்த பகவான் அருளினார் என்றாய். அப்படியானால், அவர் ஊனுண்ணலை ஒறுக்காததேன்? மறுக்காததுடன் மட்டுமல்ல, அதற்கு அவர் தூண்டுதலும் ஆதரவும் கூடச் செய்திருக்கிறாரே. ஒழுக்க நெறியின் அடிப்படையாகிய உயிரையே மறுக்கும் நீங்கள், ஒழுக்க உயர்வுப் பற்றிப் பேசுவதில் என்ன பயன்?

தலைவரைப்பற்றி நிலை இது. உலகைப் பற்றிய உங்கள் கருத்து யாதோ?

குண்டலகேசி : பேருலகு (அண்டம்) ஐங்கந்தங்கள் (ஸ்கந்தங்கள்) ஆகிய மூலப் பொருள்களாலானது. இம் மூலப்பொருள்கள் கணத்திற் றோன்றி மறைவன; உலகும் அதனைப்போன்றே கணத் தோற்றமாகி பொய்ம்மை நிலை (உறுதியற்றுக் கணந்தோறும் மாறும் நிலை) உடையது.

நீலகேசி : ஆம். இதுவே உங்கள் கண கழிவுவாதம் (க்ஷணபங்கவாதம்). இதன்படி மூலப் பொருள்களுள் ஒவ்வொன்றும் மறு பொருள் தோன்றுவதன் முன் இறந்து படுகின்றது என்று கொள்கிறீர்கள். ஒரு நிகழ்ச்சி அதன் முன்னைய நிகழ்ச்சிகளுடன் எத்தகைய தொடர்பு மற்றதாகிறது. இதனை நீங்கள் நிகழ்ச்சிப் பொய்ம்மை வாதம் (அசத் காரிய வாதம்) என்று கூறுகிறீர்கள். எனவே, நிகழ்ச்சிகளிடையே காரண காயத் தொடர்புக்கு வழியில்லை. அப்படியானால், வான் மலர (ஆகாச புஷ்பம்) போன்ற இன்மை நிகழ்ச்சி ஏற்பட தடையில்லையல்லவா? காரண காயத் தொடர்புக்கு இணைப்பாகப் பற்றுத் தொடர்பு (வாசனை) என்ற தத்துவம் கொள்ளப்படின், நிகழ்ச்சிகளிடையே ஒருவகை தொடர்பு ஒப்புக்கொள்ளப் பட்டுவிடும். கண கழிவு வாதமும், இன்மை வாதமும் இதனுடன் பொருந்தாது.

தத்துவ விளக்கம் கிடக்கட்டும். புத்தர் அருங்குணங்களை விளக்கும் போதிசத்துவர் (புத்தர் பழம் பிறவிகள்) கதைகளில் அவர் தம்மிடம் வந்து கேட்பவர்க்குத் தம் தலையும் கண்ணும் ஊனும் குருதியும் மக்களும் முதற்கொண்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பொருளைக் கொடுப்பவர் கொடையின் உயர்வு பெறுபவர்க்கு அவை பயன்படும் அளவேயாகும். தலை வேண்டியவர் தலையில்லாது முண்டமாகச் சென்றனரா? இது பொருளற்ற பொருந்தாக் கூற்றாயிற்றே?

இக்கொடைச் செயல்கள், இந்திரனால் போதி சத்துவர் சோதனைக்குட்பட்ட காலை எழுந்தன என்கிறீர்களா? நிறைவுடைய போதிசத்துவருக்குச் சோதனை ஏன்? தேவனாகிய இந்திரனுக்கு அவர் நிறைவை அறிய முடியாதா?

அவை எதற்கும் விடை பகர முடியாது குண்டலகேசி விழிக்கவே, அவள் அரசனால் அவமதிப்புடன் அனுப்பப்பட்டாள். நீலகேசி அனைவராலும் புகழப் பெற்றாள். பின், நீலகேசி குண்டலகேசியின் ஆசிரியரான அர்க்க சந்திரனைத் தேடிச் சென்றாள்.

குண்டலகேசி வாதம் - உரை முற்றும்

Previous Next Top