Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

பாஞ்சாலம் என்ற நாடு நீர் நிலவளங்கள் நிறைந்தது. அழகிய காட்சிகளை உடையது. அதன் மன்னனாகிய சமுத்திரசாரன், அந்நாட்டின் தலைநகராகிய புண்டரவர்த்தனத்தில் இருந்து செங்கோல் செலுத்தி வந்தான். நகர்ப்புறத்தில் பலாலயம் என்றொரு மயானத்தில் ஒரு காளி கோயிலிருந்தது. அதனருகில் முனிசந்திரர் என்றொரு முனிவர் வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் அந்நகர மக்கள் காளி கோயிலில் பலியிடும் படி எண்ணற்ற ஆடு மாடுகளை ஓட்டி வந்தனர். முனிவர் கொல்லா நோன்பியாராதலால், இத்தனை உயிர்கள் கொலை செய்யப்பட வருவது கண்டு மனங் கலங்கினார். எனவே, அவர் அம் மக்களைப் பரிவுடன் நோக்கி, "இத்தனை உயிர்களைக் கொல்ல நீங்கள் எதற்காக முனையவேண்டும்? இதனால் நீவிர் அடையும் பயன் என்ன?'' என்று வினவினார். மக்கள் அவரைக் கைகூப்பி வணங்கி, "பொயீர்!, எம் அரசன், நெடுநாள் மகவில்லாதிருந்து ஒரு மகனைப் பெற்றான். இறைவி அளித்த இப்பெரும் பரிசிற்காக இவ்வுயிர்களைப் பலியாகத் தந்து எம் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து வழிபாடாற்ற வருகிறோம்'' என்றார்கள்.

முனிசந்திரர் "அன்புடையீர், பிறப்பும் இறப்பும் அவரவர் வினைப்பயனேயன்றி, இறை செயலாகமாட்டா. அப்படியே இறைவன் தலையிட்டு இந் நன்னிகழ்ச்சி ஏற்பட்டதென்று கொண்டாலும்கூட, அதற்காக இவ்வுயிர்களைக் கொல்வது என்ன பயன்தரும்? உயர்க் கொலையால் தெய்வம் சினமடையுமேயன்றி மகிழுமா? உம் நன்றியை எப்படியும் வழக்கம் பின்பற்றித் தெரிவித்தல் வேண்டுமானால், உயிர்களைக் கொல்லாமலே அவற்றைப்போன்ற களிமண் வடிவம் சமைத்துப் பலியிட்டுக் கொள்ளலாமே. அவ்வாறு செய்வதனால் உம் வழிபாடும் குறைவுபடாது; இறையும் மகிழும். உங்களுக்கு இத்தனை உயிர்களைக் கொல்லும் பழியும் நேராது. கொல்லாமை சார்ந்த வழிபாடே உண்மை வழிபாடாம்'' என நயம்பட உரைத்தார்.

முனிசந்திரர் அறவுரையின் மேம்பாடும், நலமும் உணர்ந்து, மக்கள் அவர் கருத்துக்கிணங்கி உயிர்களைக் கட்டவிழ்த்து விட்டனர். பின் அவர்கள் களிமண் வடிவங்களாலேயே பலியிட்டுவிட்டு, மகிழ்ச்சியும் நிறைவும் உடையவராய் மீண்டனர். ஆனால் காளிதேவி, தன் மக்கள் வழக்கமாகத் தரும் குருதியுணவு பெறாது துயரடைந்தாள். தன் அடியவர்களைத் தன்னிடமிருந்து நமமொழியால் விலக்கிய இம் முனிவனை ஒறுத்துப் பழிக்கும்பழி வாங்கவேண்டுமென்று அவள் உள்ளம் துடித்தது. ஆயினும், யோகத்தில் வல்ல முனிவாடம் தன் மாயம் செல்லாது என்று உணர்ந்து செயலற்றிருந்தாள்.

காளிகளிடையே முடிசூடா அரசியாய் விளங்கியவள் மாகாளி நீலி அல்லது நீலகேசி. அவள் தமிழ்நாட்டில் பழையனூல் புகழுடன் வாழ்ந்து வந்தாள். மனிதரைத் தெய்வங்கள் அடக்கி ஆள்வதுபோல், அவள் தெய்வங்களை அடக்கி ஆண்டு வந்தாள். பலாலயத்துக் காளி, தனக்கு நேர்ந்த இன்னலை நீலகேசிக்குச் சொல்லியனுப்பி, அவள் உதவி கோனாள். நீலகேசியும் தன்னிடம் தோழமைகொண்ட காளியின் துயர் தீர்க்க எண்ணி அப்பணிக்கு ஒருப்பட்டாள்.

பலாலயத்தின் மயானத்தை அடைந்து நீலகேசி, தன் கூளிகளையும், பூதங்களையும், மாய உருக்களையும் ஏவி, முனிவனைச் சூழச் செய்து அச்சுறுத்தினாள். ஆனால் யோக உறக்கம் உறங்கியிருந்த முனிவரை, அவை எதுவும் அசைக்க முடியவில்லை. தன் ஆற்றலால் அடைய முடியாத வெற்றியைச் சூழ்ச்சியால் பெற எண்ணி, அவள் அந்நாட்டரசன் மகளாகிய காமலேகை யுருவில் அழகிய அழகிய தோற்றம் தாங்கி அவனிடம் சென்றாள். அரச நிலைக்குய ஆடையணிகளுடன் அவள் அவனிடம் காதல் நாடகம் நடிக்கத் தொடங்கினாள். முனிவன் முக்கால உணர்வுடையவனாதலால், அவள் உருக் கண்டு நகைத்து "நீ பெண் அல்ல; பழையனூர்க் காளி நீலி என்றறிவேன். நீ விரும்புவது காதலன்று; என் அழிவே. ஆனால் நோன்பு விமையுடைய என்னிடம் உன் செயல்கள் எதுவும் ஈடேறாது'' என்றான். அவர் யோக வலிவு கண்டு நீலகேசி வியப்படைந்து, அவர் காலில் விழுந்து, தன் தீயெண்ண முழுதும் ஒப்புக்கொண்டாள். மேலும் அவள் தன் மாய ஆற்றலினும் பன்மடங்கு ஆற்றலுடைய அவர் தன்மையைப் பாராட்டித் தன் தீ வழியினின்றும் தன்னைக் கரையேற்றி நல்வழிப்படுத்துமாறு அவரை வேண்டினள். முனிவர் அவள் பக்குவ நிலையையறிந்து, சமணநெறியை அறிவித்து அவளுக்கு அறிவு கொளுத்தினார்.

தன் கோர உருவாலும் செயலாலும் மக்களை அச்சுறுத்திய கொடுங்காளியாகிய நீலகேசி, முனிவர் அருள் திறத்தால் தன் இயல்பு முற்றும் மாறினாள். உலக வாழ்வின் தன்மை (சம்சாரம்) இது என்பதையும், இன்ப துன்பங்களின் மூலம் இது என்பதையும், விடுதலை வகையாது என்பதையும், விவாகவும், விளக்கமாகவும் முனிவர் அறிவுரையால் அவள் அறிந்து விளக்கமெய்தினாள்.

"உலகத் தொகுதி (பிரபஞ்சம் மூன்று பகுதிகளை உடையது. அவை மேல், கீழ், நடு பகுதிகள். கீழ்ப்பகுதி ஒன்றின்கீழ் ஒன்றாக ஏழு உலகங்களை உடையது. இவையே ஏழு நரகங்கள். இவற்றின் கீழே மீளா நரகமாகிய நிகோதம் அமைந்துள்ளது. நிகோதத்தில் சேர்ப்பவர்கள் மீள்வதில்லை. ஆனால் மற்ற ஏழு நரகங்களிலும் சென்று சேர்பவர்கள் தம் பழந்தீவினைப் பயன்களை முற்றும் துய்த்தவுடன் மீண்டும் நடு உலகில் வந்து பிறப்பர். இவ்வுலகிலேயே மக்களும் மாக்களும் ஆகிய உயிரினங்கள், ஓரறிவு உயிர்கள் முதலாக ஆறறிவுயிர்ரீறாகப் பல வகைப்படும். நடு வுலகத்திற்கு மேலுள்ள உலகங்கள், தேவருலகத்தின் பாற்படும். இம்முப்பகுதிகளும் சேர்ந்ததே உலகத்தொகுதி (பிரபஞ்சம்)'' என்று முனிசந்திரர் விளக்கினார்.

உலகத் தொகுதியில் வாழும் உயிர்கள் பிறந்திறந்து உழல்பவை. அச்சூழற்சியிலிருந்து விடுதலை பெறும்வகை நடு உலக வாழ்வில் மட்டுமே உண்டு. நடுப்பகுதியிலும் சில இடங்களில் மட்டுமே விடுதலைக்கு வேண்டும். நோன்பு, தவம் முதலியவை இயற்றுவதற்கான சூழ்நிலைகள் காணப்படும். இத்தகைய இடங்களையே நன்னிலங்கள் (கர்ம பூமிகள்) என்று கூறுகிறோம். நீலகேசி போன்ற தெய்வங்கள் மேலுலகங்களில் வாழ்பவர்கள். எனவே, அவர்கள் நடுநிலத்து அறவோரை விடத் தாழ்ந்த நிலையையே உடையவர்கள். ஏனெனில், அவர்களைக் கண்டு அஞ்சுபவர்கள் தீயவர்கள் மட்டுமே. எப்பகுதியிலும் நல்லவர்கள், அவர்களைப் பழித்து இழிக்கவே செய்வர். அவர்கள் தம் அடியவர்களை விடுவிப்பதற்கு மாறாக மென்மேலும் அடிமைக் கட்டில் இறுக்கவே உதவுவர்.

விடுதலை பெற வேண்டின், மூன்று வழிகள் உள. அவை அமுதம்போல் அழியா வாழ்வு தரத்தக்கவை. அவை நன் ஞானம், நற்காட்சி, நல்லோழுக்கம் ஆகியவை. உலக முய்யும்படி சஞ்சீவிகளான இந்நெறிகள் அறிவுமயமான வரும் அன்பு மயமானவருமான ஜினபகவானால் அருளப்பட்டவை. இவற்றை மேற்கொண்டவர் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடையவராய், உள மொழி மெய்கள் மூன்றினாலும், எவ்வுயிர்களுக்கும் துன்பம் உண்டுபண்ணா முறையில் வாழ்பவர்.

முனிசந்திரர் கூறிய அருள் நெறியைக் கேட்டபின் நீலகேசியின் அறிவுக் கண் திறந்து, அதை மூடியிருந்த அறியாமை இருள் அகன்றது. அவள் அருளுருவினனும் அறிவுருவினும் ஆகிய ஜினனையும் அறத்தையும் (ஜின தர்மத்தையும்) பாடிப் பரவினாள். தன் பழைய குருதி வாழ்வை வேம்பென வெறுத்தாள். அதனின்றும் தன்னைக் கரையேற்றி அறிவொளி தந்த குருவினிடமும், தலைவனாகிய ஜினனிடமும், தன் கடமையையும் நன்றியையும் தெரிவிக்கு முறையில், அவள் பல நாடுகளிலும் சமண அறவொளியைப் பரப்புவதென்று உறுதிகொண்டாள்.

தர்ம உரை - உரை முற்றும்

Next Top