Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
வைசேடிக வாதம்

வைசேடிக நெறியைத் தோற்றுவித்த முதல்வர் கணாதர். நீலகேசியில் வைசேடிக ஆசியர் பெயர் லோகஜிதர்.

வைசேடிக நெறியில் முதனிலை பொருள்கள் (பதார்த்தங்கள்) ஆறு. அவை முறையே பொருண்மைகள் (திரவியங்கள்); பண்பு (குணம்); வினை (கர்மம்); தொகை (சாமானியம்); வகை (விசேஷம்); வாய்ப்பு (சமவாயம்) என்பவை.

பொருண்மைகள் என்பது : ஐம்பூதங்கள், திசை, மனம், காலம், உயிர் (ஜீவன்) என்பன.

பண்பும் வினையும் பொருண்மையுடன் ஒன்றியவை.

தொகை, பெருந் தொகை (மஹா சமவாயம் அல்லது பரசமவாயம்) என்றும், சிறு தொகை (அலாந்தர சமவாயம் அல்லது அபர சமவாயம்) என்றும் இருவகை. பொருள்களில் கண்ட பொதுத் தன்மையே தொகை எனப்படும். எல்லாப் பொருளுக்கும் அடிப்படையான பொதுத்தன்மை (பொருண்மை நிலை)யே பெருந்தொகை. மற்றப் பொதுத்தன்மைகள் சிறு தொகைகள். வகை என்பது பொருள்களிடையே கண்ட வேற்றுமை அல்லது வேறுபாடு வாய்ப்பு, பொருண்மையுடன் அவ்வவற்றுக்கேற்ற பண்பும் செயலும் கொண்டு கூட்டும் இயல்பு. இவற்றுள் முதல் மூன்று (பொருண்மை, பண்பு, செயல் ஆகிய) தனிப் பொருள் நிலை உடையவை. அவை வாய்ப்பு மூலம் கலத்தலாலே செயலுலகம் உண்டாம். தொகை வகைகள் வாய்ப்புக்கு உதவுவன.


Top