Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
ஆசீவக நெறி

நீலகேசியில் காணப்படும் ஆசீவகக் கோட்பாடுகளைப்பற்றிக் கூறுமுன், அதன் வரலாறு பற்றிச் சிறிது கூறவேண்டும். இதனைத் தோற்றுவித்த முதல்வராகிய மஸ்கா என்பவர் புத்தர், மகாவீரர் (சிநர்) ஆகியவர் காலத்தவரே. புத்த நூல்கள் அவரை முகலி புத்த என்றும் புத்தர் காலத்து எட்டுச் சமயத் தலைவர்களுள் ஒருவராகவும் குறிக்கின்றன. அறிஞர் ஹேர்ன்லே, சமய ஒழுக்கத்துறைப் பேரறிவுத் தொகுதியில் (Dr. Hoernle in Encyclopeadia of Religion and Ethics) அவர் மகா வீரரை மீறித் தனிச் சமயம் ஏற்படுத்திய மாணவர் என்று குறிக்கிறார். அவர்கள் ஏகதண்டிகள் என்றும், மஸ்கரியர்கள் என்றும் ஜாதகங்களில் (புத்தர் பிறப்புக் கதைகளில்) குறிப்பிடப்பட்டனர். ஆஜீவகர் என்ற பெயர், பிழைப்புக்காக வேடமிட்டவர் என்ற பொருளில், மாற்றார் ஏளனமாக வழங்கிய பெயரேயாகும்.

பிற்காலத்தார் ஆசீவகர் திகம்பர சமணான் ஒரு பகுதி என வெளித் தோற்றத்தால் மயங்கினர். புத்த நூல்கள் ஆசீவகர் என்ற பெயருடன் அவர்களைக் குறிக்காவிடினும் அவர்களைச் சமணர் என்று கூறவில்லை. புத்தரும் மகாவீரரும் மஸ்கரியின் ஒழுக்கக்கேட்டை ஒருப்போலவே கண்டித்துள்ளனர். அறிஞர் ஹெர்ன்லே திகம்பர சமணருக்கும், ஆசீவகருக்கு மிடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளையும் எடுத்துக்கூறுகிறார்.

கயாவின் பக்கத்தில் பர்பாக் குன்றுகளின் குகைகளிலுள்ள அசோகர் கல்வெட்டுக்களிலொன்று, அக்குகை பியதாஸியால் (அசோகரால்) ஆசீவகர்களுக்காக விடப்பட்டது என்று குறிக்கிறது. இவ்விடத்தில் பார்ப்பனர், நிகண்டர் (சமண திகம்பரர்) ஆசீவகர் என, ஆசீவகர் தனிப்படவே குறிக்கப்படுகின்றனர். கி.பி. 6-ம் நூற்றாண்டினரான வராகமிசிரர் தம் பிருகத் ஜாதகத்தில் அக்கால ஏழுவகைத் துறவிகளுள் ஒருவகையான ஆசீவகரைக் குறிக்கின்றனர். அவ்வேழு வகையினர், சாக்கியர், ஆசீவகர், நிகண்டர், தாபதர், பிக்குக்கள், விதூடகர், சரகர் என்பவர். வராகமிஹிரான் உரை காரரான படோட்பலர் ஆசீவகர் அல்லது ஏகதண்டிகள் நாராயணனை வணங்குபவர் என்று தொவிக்கிறார். நீலகேசியும் இங்ஙனமே குறிப்பது கவனிக்கத்தக்கது. எனவே, சில வெள்ளணி (சுவேதாம்பர) சமண நூல்களைப் பின்பற்றி ஆசீவகர் திகம்பர சமண வகையினரே என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவத பொருத்தமற்றது.

வெள்ளணியர் (சுவேதாம்பரர்) கூறும் வேறு சில செய்திகளையும் அறிஞர் ஹேர்னிலே ஆராயாது ஏற்கிறார். மகா வீரருக்கு முந்திய தீர்த்தங்கரரான பார்சுவநாதர் கொல்லாமை, மெய்ம்மை கூறல், திருடாமை, உடைமை கொள்ளாமை ஆகிய நான்கு நோன்புகளையே வலியுறுத்தினர். மகாவீரர் நிறையுடைமை (பிரமசாயம்) என்பதையும் உட்படுத்தினார். இது ஒருவகையில் உண்மையேயாயினும், இது வலியுறுத்து முகத்தினால் அன்றி வேறன்று. முதல் நான்கிலும் இது தொக்கதாகவே முதலில் கொள்ளப்பட்டது. ஆனால் பார்சுவநாதர், துறவியர், ஆடையோ கெளபீனமோ வைத்துக்கொள்ள இணங்கியதாகவும், மகாவீரரே முதன் முதலில் அதனையும் ஒறுத்ததாகவும் வெள்ளணியார் கூறுகின்றனர். மகா வீரான் மாணவரான கோசல மொகலபுத்திரர், இதனை ஏற்காது பிந்து நின்றார் என்பதை அறிஞர் ஹெர்ன்லே நம்புகிறார். ஆனால் வெள்ளணியினர், திகம்பரர் வேறுபாடு மகாவீரர் காலத்துக்குச் சிலகாலம் பிந்தியே ஏற்பட்டது என்று வரலாறு கூறுவதை அவர் கவனிக்கவில்லை. திகம்பரர் சாவகர் (தொடக்கத் துறவி)களுக்கே கெளபீன உடுக்கை ஏற்னர்.

சமணர் அல்லாதார் பலர் குறிப்பிடும் நிகண்டரும், புத்தர் குறிப்பிடும் அசேலகரும் திகம்பரச் சமணரேயன்றி ஆசீவகர் அல்லர்.

தென் இந்திய சோழர் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் குறிக்கப்படும், ஆசுவக் கடமை என்பது, ஆசீவகர் மீது இட்டவரி என்று அறிஞர் ஹேர்னிலே கூறுவதும், இத் தப்பெண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட ஊகத்தாலேயேயாகும். ஆசுவக் கடமை என்ற தொடர் வருமிடங்களிலெல்லாம் முன்னும் பின்னும் வாணிகம், தொழில் ஆகியவற்றின் மீதுள்ள வாகள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. ஆசு என்பது தமிழில் வார்ப்பு அச்சு எனப் பொருள்படும். வெங்கலத்தில் வார்ப்பட வேலை செய்யும் கன்னார்மீதுள்ள வாயே இது குறிக்கத்தகும் துறவி வகுப்பினர்மீது வரிவிதிப்பது முன்பின் பொருத்தமோ இயற்கையோ அன்று. எனவே, தமிழ்நாட்டிலே பிற்காலத்தில் (நாயன்மார் காலத்திலும் அதன் பின்னும்) ஆசீவகர் அறியப்பட்டனர் என்பதற்கில்லை. வடநாட்டில் மட்டும் 6-7 நூற்றாண்டுகள் வரை அது அழியாது நிலவிற்று.

ஆசீவகர், தம் தலைவராக மஸ்கா பகவான் நிறைவறிவுடையவர் என்றும், இருவினையற்றவர் என்றும், ஆயினும் செயலற்று வாய் திறவாது வாளாவிருப்பவர் என்றும் கொண்டனர். எனவே, அவர் நிறைவர் (பூரணர்) என்றழைக்கப்பட்டனர். செயலற்றிருத்தலும், வாய்பேசாததும் நடக்கும்போதும் பேசும்போதும் சிற்றுயிர்களுக்குத் தீங்க நோடும் என்பதற்காகவே என்று அவர்கள் கருதினர்.

ஆசீவகான் மறைமொழிகள் ஒன்பது 'ஒளிக்கதிர்கள்' எனப் பெயர் பெற்றன. அவை மக்களுக்குப் புகட்டிய மெய்யறிவின்படி உலகப் பொருள்களின் தோற்றமும் மறைவும் காரணமற்றவை (காரணமின்றித் தற்செயலாய் நிகழ்பவை) பருப்பொருள்களையன்றி மெய்ப் பொருள்கள் இல்லை. அவை உருவம் உடையவை; இடங் கொள்பவை. அவற்றுக்குத் தன்மைகள் உண்டு; ஆனால் பண்புகள் கிடையா. அம்மூல மெய்ப்பொருள்கள் ஐந்து. மண், காற்று, தீ, நீர், உயிர் என்பவை. இவையனைத்தும் அணு உருவுடையவை. நிறம், மணம், ஊறு ஆகிய மூன்றும் மண்ணின் இயல்புகள். நீன் தன்மை தட்பம், தீயின் தன்மை வெப்பம், காற்றின் தன்மை ஓசை, உயிரின் தன்மை உணர்தல், இவற்றாலாய பொருள்களுக்கு இவற்றின் தன்மையன்றி வேறு பண்பு இல்லை. ஒரு மூலப் பொருளுடன் மற்றப் பொருள் சேர்ந்திருக்குமாயினும், ஒன்றில் ஒன்று கலந்து ஒன்றுபடுவதில்லை. கொடிகள் ஒன்றின்பின் ஒன்று வருவதன்றித் தொட்ச்சியான காலம் என்று ஒன்றில்லை. ஒழுக்கம் என்பது இன்பத்தை நாடுவதேயன்றி வேறெதுவும் அல்ல. (நரகம், துறக்கம் மறுபிறப்பு, தெய்வம் படைப்பு இல்லை என்பது தெளிவு). காய காரணத் தொடர்பு கிடையாது. எல்லாம் மாற்றமற்ற ஒரே நிலை. (அவிசலித நித்யம்).

உயிர். உருவமுடைய பருப்பொருள். அதற்கு நீளமும் அகலமும் மட்டுமன்றி 500 யோசனை (5000 மைல்) உயரமும் உண்டு. அது பாலைக் கனிபோன்ற நீலநிறமுடையது. உயிர்கள் எண்ணற்றவை. அனைத்தும் வீடு பெறுதற்குரியவையே. அங்ஙனம் எலலா வுயிர்களும் வீடடைந்தால் மீண்டும் பிறக்கும். இக்கருத்து 'மண்டல வீடு' எனப்படும் (மண்டல மோக்ஷம்).

ஐம்பொருள்களுள் தீயும் உயிரும் மேல்நோக்கிச் செல்பவை. காற்று, பக்க நோக்கிச் செல்வது. மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை.

நோன்புகள் ஒழுக்கமுறைகள் ஆசீவகரால் பாராட்டப்பட்டன.


Top