Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
புத்த சமயம்

நீலகேசி, புத்தசமய நூலாகிய குண்டலகேசியை மறுக்கவே எழுந்ததாயிருக்க வேண்டுமாதலால், அதன் கண்டனங்களுள் புத்தசமயக் கண்டனமே முதலிடம் பெற்றிருக்கிறது. குண்டலகேசி வாதம், அர்க்கசந்திர வாதம், மொக்கல வாதம், புத்த வாதம் என்ற நான்கு பிரிவுகளால் இச் சமயக் கருத்துக்கள் விளக்கப்பட்டுக் கண்டிக்கப்படுகின்றன. இவற்றுள் முதல் இரண்டும் நான்காவதுமாகிய மூன்றிலும் பெரும்பாலும் புத்தசமய ஆராய்ச்சியே நிறைந்திருக்கின்றன. மூன்றாவதாகிய மொக்கல வாதத்தில் மொக்கலன் மூலமாகச் சமண சமயத்தைக் கண்டித்துக் குண்டலகேசி நிகழ்த்திய வாதப் பொருளை எதிர்த்து, நீலகேசி விடையளிக்கிறாள். எனவே, இப்பகுதிதான் நேரடியாகக் குண்டலகேசிக்கு மறுப்புக்கூறும் பகுதியாயிருத்தல் வேண்டும். குண்டலகேசி பெரும்பகுதியும் நமக்குக் கிட்டாமற் போகவே, அதன் போக்கை உய்த்தறிவதும் பெரும்பாலும் இப்பிரிவினால் மட்டுமே கூடும்.

குண்டலகேசி வாதத்தில் குண்டலகேசி புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை நான்காக வகுக்கிறாள். அவை முதல்வர் (ஆப்தர்) வாய்மொழி (ஆகமம்) பொருண்மை (பதார்த்தம்) செயல் (பிரவிருத்தி) ஆகியவை. முதல்வராகிய புத்தர், காலத் தொடக்க முதல் என்றமிருப்பவர்; எல்லாம் வல்லவர்; இருவினையகன்றும் உயிர்கள் நலனை எண்ணி உலக வாழ்வில் பேமூழி பேமூழிதோறும் (கற்பந்தோறும்) ஊடாடுபவர். அறநெறி உரைத்து அதனை ஏற்றோர்க்கெல்லாம் வீடுபேறு அளிப்பவர்.

புத்தர் பிரானால் அருளிச் செய்யப்பட்ட வாய்பெமாழிகளான பிடகங்கள் மூன்று. அவை சுத்த பிடகம் (சூத்ர பிடகம்) வினய பிடகம், அபிதம்ம பிடகம் (அபிதர்ம பிடகம்) என்பன. புத்த நெறிப்படி, உலகில் மெய்ம்மையான பொருள்கள் அடிப்படைப் பொருள்களான ஐந்து கந்தங்களே. (ஸ்கந்தங்கள்). இவையன்றி உயிர் என்றே ஒன்று இல்லை; உலகு நிலையுடையதல்ல; காலம் என்று ஒன்று கிடையாது; நொடிகள் மட்டுமே உண்டு. எனவே கந்தங்களும் நிலையானவையல்ல. கணந்தோறும் அழிந்து மறுகணத்தில் புதிதாகத் தோன்றுவன, காரண காரியத்தொடர்போ, பொருண்மைத் தொடர்போ அவற்றிடையே இல்லை. அதாவது, பொருள் ஒன்று இருப்பதாகத் தோற்றுகிறதேயொழிய, உண்மையில் கணம்தோறும் வேறு வேறு பொருள்கள் மாறி, ஒரே பொருள் போல் தோற்றுகின்றது என்று புத்தர் கொள்கின்றனர். ஆற்றில் ஒரு கணம் உள்ள நீர் மறுகண மாறினும், ஒரே ஆற்றைப் பார்ப்பதாக நாம் எண்ணுவது போல, உலகத்தோற்றமும் மாறாதிருப்பதாகத் தோற்றமளிப்பது மயக்கமே என்பர். ஐந்து கந்தங்களாவன :- உருவகந்தம் (மூபஸ்கந்தம்) உணர்ச்சிக்கந்தம் (வேதனாஸ்கந்தம்) அறிவுக்கந்தம் (விஜ்ஞானஸ்கந்தம்) பெயர்க்கந்தம் (ஸம்ஜ்ஞாஸ்கந்தம்) செயற்கந்தம் (ஸம்ஸ்காரஸ்கந்தம்) என்பவை.

உருவக் கந்தத்துள் எட்டினம் (அஷ்டகம்) என்றழைக்கப்படும் எட்டு வகை உலகப் பொருள்கள் அடங்கும் அவை மண், நீர், காற்று, தீ என்னும் மூலப் பொருள்களும், அவற்றிற் கிணையான நிறம், சுவை, மணம், ஊறு ஆகிய புல உணர்ச்சிகளும் ஆகும். இவை எட்டும் ஒருங்குகூடியே எட்டினம் அல்லது பொருளாகத் தோன்றும். இவையன்றி மண்ணுக்குத் திட்பமும், நீருக்கு நெகிழ்ச்சியும், தீக்கு வெப்பமும், காற்றுக்குச் சுழற்சியும் தன்மைகளாம். பொருட் பண்புத்தொடர்பைப் புத்தர் ஏற்பதில்லையாதலால், இவை பண்பாக மாட்டா.

உணர்ச்சிக் கந்தம் இன்ப உணர்ச்சி, துன்ப உணர்ச்சி, சமனுணர்ச்சி என மூவகை. அறிவுக் கந்தம்; ஐம்புல அறிவுடன் மன அறிவும் கூடியது. செயற் கந்தம் மனமொழி, மெய்ச் செயல், உள் என மூவகைப்பட்டது. நன்மை தீமை எனவும் இம் மூன்றும் பின்னும் பகுக்கப்படும்.

தீச்செயல்களுள் கொலை, களவு, காமம், உடல், பற்றியவை; பொய், கோள், கடுஞ்சொல், பயனில் சொல் நாலும் மொழி பற்றியவை; அவா, வெகுளி, மயக்கம், மனம் பற்றியவை.

புத்த சமயம் கொல்லாமையை உயர்வுடையதாகக் கொண்டது. ஆனால், ஊனுண்ணல் கொலையின்பாற்படாதெனப் புத்த நூல்கள் வாதித்தன. கொலை தீவினையாக வேண்டுமானால், கொலைக்காளான பொருள் உயிர் உடையதாயிருத்தல் வேண்டும். உயிருடையதெனக், கொல்பவர் உணர்ந்திருத்தல் வேண்டும். கொல்லும் எண்ணம் வேண்டும்; கொலைச் செயல் வேண்டும்; பொருள் உயிரிழத்தல் வேண்டும் என்ற ஐந்து கூறுகள் நிறைவேறுதல் வேண்டும்.

புத்தர்கள் கோட்பாடுகளைச் சுருக்கிக் கூறும் நான்கு பெருவாசகங்கள் உள. அவை யாவும் துன்பம், (சர்வம் துக்கம்) யாவும் தூய்மையற்றவை, (சர்வம் அசுசி) யாவும் அழிபவை, (சர்வம் அநித்தியம்) யாவும் உயிரல்லாதவை, (சர்வம் அனாத்மா) என்பவை.

சமணர் பொருண்மை யறியும் வழிகளாகக் கொண்ட பெயர், உரு, பொருண்மை, செயல் என்ற நான்கில், புத்தர் செயல் ஒன்றே ஒத்துக்கொண்டனர்.

(புத்த சமயம் இறைவன், உயிர், பொருள் மூன்றையும் மறுத்து, எல்லாம் மாற்றம், தோற்றம் என வாதித்தது. அது மாயாவாதத்தின் பாற்படும்).


Top