Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
சமண சமயக் கோட்பாடுகள்

உலக வாழ்வு துன்பம் நிறைந்தது. துன்பத்திற்குக் காரணம் தீவினை. அதன் காரணம் அவாக்கள். அதிலிருந்து விடுபட அருமருந்தாவது அருகன் தாள்கள். அதனை அடையும் வகைகள் சிநபகவானால் வகுக்கப்பட்ட அறநெறி.

உலகத் தொகுதி (சம்சாரம்) மேல் உலகு, நடு உலகு, கீழ் உலகு என, மூன்று பாகுபாடுகளை உடையது. கீழ் உலகு என்பது ஒன்றின் கீழ் ஒன்றாய் அமைந்த ஏழு நகரங்களை உடையது. தீவினைப் பயன் நுகர்வோர் இதில் சென்றழுந்தித் தீவினைப் பயன் அகன்றபின், மீண்டும் நடு உலகிற் பிறப்பர். ஏழு நகரங்களுக்கும் கீழாக நிகோதம் என்ற மீளா நரகு ஒன்று உண்டு. உய்தி வழியற்ற தீவிணையாளர் சென்று, மீளாத் துயரடைந்தழுந்துமிடம் இது. மேலுலகு தேவர்களிருப்பிடம். நல்வினைப்பயனை, உயிர்கள், தேவர்களாக நின்று நுகரும் இடம் இது. நல்வினைப் பயன் தீந்ததும் தேவர்களும் அதனின்று நீங்கி நடு உலகு வரவேண்டியதுதான். ஆகவே, உண்மையில் இது நடு உலகை விட மதிப்புக் குறைந்ததே.

இரு விளைகளுக் கீடானதும், அவற்றினின்று விலகி வீடு பெறும் வாய்ப்பளிப்பதும் நடு உலகேயாம். இதிலும் அவ்விடுதலைக்கான சுற்றுச்சார்புகளுடைய இடம் வினை நிலம் (கர்ம பூமி) எனப்படும். இந்தியா அத்தகைய நினைநிலம் ஆகும்.

நடு உலகே ஆறறிவுடைய மக்களுக்கும் ஐயறிவுடைய மாக்களுக்கும் இருப்பிடமாவத. ஐயறிவுயிர்களும் ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாகப் பல பல படிகளாக வகுக்கப்படும். (இப்பாகுபாடே தொல்காப்பியத்திலும் குறிக்கப்படுகிறது). மண், புனல், அனல், காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்களிலும் கண்ணுக்குத் தெரியாது அணுவுருவில் உள்ள ஓரறிவுயிர்கள் பல உள. (தற்கால அறிவியலார் கூறும் அணுவுயிர்கள் இவை).

சிந பகவான் வீடு பேற்றிற்குக் கருவியாகிக் காட்டிய நெறிகள் மும்மணிகள் எனப்படும். அவை நன்ஞானம் நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவை ஆம். இவை அனைத்துக்கும் அடிப்படையானது அருள் அல்லது எல்லா உயிர்களிடமும் கனிவுடைமை ஆகும்.

சமண நெறியின் அடிப்படை மெய்ந் நிலை (தத்துவங்களாக மொக்கல வாதத்திற் கூறப்படுவன, இயக்கம் (தர்மம்) நிலை (அதர்மம்), காலம், வெளி (ஆகாசம்), உயிர் (ஜீவன்). பருப்பொருள் (புத்கலம்), நல்விணை (புண்ணியம்) தீவினை பாபம்) கட்டு (பந்தம்) வீடு (மோக்ஷம்) என்னும் பத்துமாம். இவற்றுள் முதல் இரண்டும் ஒன்றுக்கொன்று மாறாயினும், ஒரே உலகின் இரு தன்மைகளைக் கூறுபவையாம். இந்நாட்டில் எழுந்த சமயங்களில் (மேல்நாட்டில் எழுந்தவற்றில்கூட) பல உலகை முற்றிலும் இயக்கச் சார்பாகவும், முற்றிலும் நிலைச்சார்பாகவும் கொண்டு அல்லற்படுகின்றன. உலகு முற்றிலும் இயக்கச் சார்பானால், பொருள்களில் மாற்றத்துக்கு மட்டும் வழி உண்டு. தொடர்ச்சிக்கு வழியில்லை. முற்றிலும் நிலைச்சார்பானால் தொடர்ச்சி உண்டு. ஆனால் மாற்றம், வளர்ச்சி, உயிர் வாழ்வு ஆகியவற்றுக்கு இடமிராது. சமண சமயமொன்றே உலகத் தொகுதியின் அடிப்படை மெய்ம்மை, நிலையுடைமையென்றும், அதனுள்ளீடாக உடனாகவே இயக்கமுடைமையும் உண்டு என்றும் கொள்கிறது (தற்கால அறிஞர் ஈன்ஸ்டீனின் 'தொடர்பு இயல்' கோட்பாட்டுடன் இது மிகவும் ஒப்புடையதாதல் காணலாம்). இதுபோலவே சமண மெய்ந்நிலை விளக்கம், பொருளும் பண்பும் வேறெனவும் கொள்ளாது, ஒன்றெனவும் கொள்ளாது. பொருண்மையில் ஒன்று, தன்மையில் வேறு என்ற ஒற்றுமையில் வேற்றுமைக் கொள்கை (பேதா பேத வாதம்) கொள்கிறது. ஆகவேதான் நிலை - நிலையாமை, உண்மை - இன்மை, ஒற்றுமை - வேற்றுமை முதலிய மாறுபடு தொடர்கள் மெய்ம்மையின் இரு தன்மை விளக்கச் சமண அறிஞரால் வழங்கப்படுகின்றன.

காரணமும் காரியமும் ஒன்றெனச் சிலரும் (சத்காரியவாதம்) வேறு எனச் சிலரும் (அசத்காரிய வாதம்) வாதிப்ப சமணநெறி ஒன்று எனின் வேறு என்று கொள்கிறது. (சதசத்காரிய வாதம்). பொருள்களின் மெய்ம்மையை உணரும் வகைகளைச் சமண நெறி நான்காக வகுத்துள்ளது. அவை, பெயர் (நாமம்) உரு (ஸ்தாபனம்) பொருண்மை (திரவியம்) செயல் (பாவம்) என்பவை. இந்திய சமயங்களெல்லாவற்றுக்குமே கொல்லாமை அடிப்படையுண்மையாயினும், சமணம் ஒன்றே அதை ஐந்திரிபன்றி முழு வலிவுடன் மேற்கொள்வது. வேத நெறியாளர் வேள்வியில் கொலை ஏற்றனர். சமணர்கள் கொள்கையின்படி, தொடக்கக் காலத்தில் வேதங்கள் கொல்லா நெறியின் பாற்பட்ட வேள்விகளே செய்தன. அவ்வளவில் சமணரும் வேதங்களை ஏற்கவே செய்தனர். ஆனால் பிற்காலத்தவர் வேள்வியில் 'அஜம்' படைக்கப்பட வேண்டும் என்பதற்கு முளை தவிர்ந்த நெல்மணி எனப் பொருள் கொள்ளாது, ஆடு எனக்கொண்டு, பின்னர் மாடு குதிரை முதலியவற்றையும் வேள்வியின் பேரால் கொல்லத் தொடங்கிய பின், சமணர் அக்கொலை வேள்விகளையும் வேதத்தையும் மறுத்தனர். வேத சமய நீங்கலான பிற பல சமயத்தார்களும், ஒவ்வொரு வகையில் வேதத்தை மறுக்கவே செய்தனராயினும், சமணரளவு கொல்லா நெறியைப் பேணி காக்கவில்லை.


Top