Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
273.
துன்னஞ்செய் தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும்
பொன்னஞ்செய் புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து
தன்னமு மளித்தாயதலைசொறியு மிடையிலையா
லென்னவற்றி னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள்.
274.
ஆங்கவ ளதுவுரைப்பவதற்கு¡¢ய மறுமாற்றந்
தாங்களு மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார்
மூங்கைமையான் மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான்
பாங்கினால் வினவுவன்படிறின்றி யுரையென்றாள்.
275.
வீடிற்கே யெனின் ஞானம்வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயனென்னையெனவினவ மொக்கலன
மூடிற்றுஞ் சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான்.
276.
படைப்பெளிதாற் கேடறிதாற்பலகள்வர் நவையாரா
லுடைக்கியைந்த வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பொ¢தன்றாற்றொட்டைந் பூணியோ.
277.
பொன்கொண்டா ராயினும் போர்வைபூச் செனிற்புலையன்
வன்கண்மை யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர்
தன்றன்மை யாகியதான்பழிப்பார் தாமுளரோ
வெண்கண்டு வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள்.
278.
உண்ணன்மை தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய்
திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ் செய்தலால்
பெண்ணென்றும் பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய்
கண்ணன்றோ வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய்.

உரை Previous Next Top மொக்கல வாதம் :
வது பக்கம்