Download PDF
முகப்பு வாயில்



அறத்துப்பால் > துறவற இயல் > செல்வம் நிலையாமை
1.
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
 மறுசிகை நீக்கியுண்டாரும் - வறிஞராய்ச்
 சென்றிரப்பர் ஓ¡¢டத்துக் கூழ்எனின் செல்வம் ஒன்று
 உண்டாக வைக்கற்பாற் றன்று

ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று.

2.
துகள்தீ£ர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யா¡¢டத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.

செல்வம் நிலையாமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next