Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
926.
மாலைத்தண்டு அமோகம் வாளி கலப்பையும் பலன வாகும்
 நாலுநல் லியக்கர் நாலா யிரவர்காப் பியற்றிச் செல்வர்
 ஏலவார் குழலின் மாதே வியரும் எண்ணா யிரவர்
 மேலுலாம் மதியம் போலும் மேனியாள் விரும்பப் பட்டார்.
ழுமதியைப் போன்ற வெண்ணிறமுடைய பலதேவனுக்கு, மணி மாலை¨, தண்டாயுதம், சக்திமிக்க பாணம், கலப்பை ஆயுதம் என நான்கு இரத்தினங்களாகும். இவற்றை நான்காயிரம் இயக்கர்கள் பாதுகாத்தனர். நறுமணச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய மங்கையர் எண்ணாயிரம்பேர் இவனுக்குத் தேவியராவர்.

927.
கந்திலை நாட்டுக் கண்டம் மூன்றினில் காமர் செல்வத்து
 இந்துவாண் நுதலி னாரோ டின்பநீர்க் கடலை யாடி
 அந்தரத் திறைவன் போல ஆண்டுகள் பலவும் சென்றார்
 வெந்திறல் களிற்று வேந்தன் விபீடணன் வியோக மானான்.
காந்திலை என்னும் மிகப்பொ¢ய தேசத்தின் மூன்று பகுதிகளுக்கும் மன்னராகி அதாவது அர்த்த சக்ரவர்த்திகளாகி, சந்திரன் போல் ஒளிமிக்க நெற்றியையுடைய அழகிய மகளிருடன் இன்பக் கடலில் மூழ்கி அமரேந்திரனைப் போல் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். அதன் பின் வலிமைமிக்க யானைகளையுடைய வாசுதேவன் ஆயுள் முடிந்து மரணம¦ய்தினான்.

928.
அருமணி இழந்த நாகம் போல்பலன் அலம்வந் தாற்றப்
 பெருகிய துயர முற்றுப் பிறவியை வெருவிப் பின்னாள்
 மருவிய பொருளும் நாடும் மைந்தர்கட்கு ஈந்து மாற்றை
 விரகினால் எறியும் வீத ராகமா முனிவ னானான்.
வாசுதேவன் இறந்ததால் அருமணியை இழந்த நாகம் போல் மனம் கலங்கித் துயருற்று நின்ற வீத பயனாகிய பலதேவன் சில நாள்களுக்குப் பிறகு தனக்கு¡¢ய செல்வங்களையும் அரசையும் தனது மைந்தர்களிடம் ஒப்படைத்து இப்பிறவியை முறைப்படி கெடுக்கக்கூடிய ஆசையற்ற மிகப்பொ¢ய முனிவராகத் துறந்து சென்றான்.

929.
வலம்பு¡¢ வண்ணன் ஆரா தனையினால் உடம்பு விட்டிட்டு
 இலாந்தவ கற்பம் புக்கான் யானவன் இன்று வந்தேன்
 புலங்கள் மேல் பு¡¢ந்து வீந்த கேசவன் புக்க தேசம்
 இலங்கிப் போய்த்தீர யான் இந்நரகிற் கண்டுஇடரை யுற்றேன்.
வலம்பு¡¢ச் சங்கு போன்ற வெண்ணிறமுடைய பலதேவன் நான்கு வகையான உயர் பாவனைகளால் தனது உடலை நீத்து லாத்தவ கல்பத்து தேவனாயினன். அந்த அமரனாகிய நான் தான் இந்த பா¢நிர்வான பூஜைன்கு வந்திருக்கின்றேன். புலன் இன்பங்களில் பொ¢தும் பொருந்தி இருந்ததால், அந்த விபீஷணனராகிய வாசுதேவன் நரகத்தில் வீழ்ந்ததை எனது ஓதியால் உணர்ந்து அங்குச் சென்று அவனைக் கண்டுப் பொ¢தும் வருந்தினேன். அடுத்து அவனுக்கு அறவுரை ஆற்றத் தொடங்கினேன். (என ஆதித்யாப தேவன் தரணேந்திரனிடம் கூறினான்).

  பலதேவன் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page