Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1046.
சந்தன குழம்பின் ர்ந்த சந்திர காந்தச்செப்பும்
 குங்குமக்குழம்பு விம்மும், இரவியின் குழவிச் செப்பும்
 இந்திர நீலச் செப்பும் அகில் புகைப் புகைத்த ஏந்தி
 மைந்தரைச் சூழ்ந்து நின்றார் மயில் குழாம்போல வந்தே.
சந்தனக் குழம்பு நிரம்பிய சந்திரக் காந்தக் காந்தக் கிண்ணங்களையும், குங்குமக் குழம்பு நிரம்பிய சூ¡¢ய காந்தக் கிண்ணங்களையும், அகில் புகை அளிக்கின்ற இந்திர நீலக் கிண்ணங்களையும் ஏந்திய மயில்கள் போன்ற. அழகிய பிணப்பெண்கள் அவர்களைச் சூழ்ந்தனர்.

1047.
விசும்புற வி¡¢ந்து நாறும் விரைமலர் மாலை பெய்து
 பசும்பொனும் மணியும் மின்னும் படலிகை பலவும் ஏந்தி
 அசும்பறாக் கடாத்த வேழத்து அரசிளம் குமரர் வந்தார்
 விசும்பின் மேல் வினையுற்பாதம் அருக்கர்தாம் இருவர் ஒத்தார்
விண்ணகம் எங்கும் மணம்பரப்பும் மலர்மாலை முதலியவைகளைக் கொண்ட, பொன்னாலும், மணிகளாலும் ஆகிய அழகிய தட்டுகளுடன், மதநீர் கொட்டும் யானைகளின் மத்தகங்களில் அமர்ந்துவந்த மேரு மந்தரர் என்னும் இரு அரச குமார்களும் இரண்டு சூ¡¢யனைப் போல் விளங்கினார்கள்.

  ஸ்ரீ விஹாரச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page