Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
965.
என்று இக்கதி நீங்குவது என்று ஏதமுற வேண்டாம்
 நின்ற வினை நீங்கிய கணத்து இதுவும் நீங்கும்
 அன்றித்துயர் நீங்குவதற்கு ஆர்வம் எழுமாகில்
 ஒன்றும் உனை நின்று வினை ஒறுக்கம் இனி மிக்கே.
இக்கொடிய பிறப்பானது எப்போது ஒழியும் என்று வருந்தவேண்டாம். உனது தீவினைக்கட்டுத் தளர்ந்த வுடனே ஒரு கணத்திலே இப்பிறவியும் நீங்கும். இத்துன்பம் நீங்க வேண்டுமென்ற ஆசை மிக்கெழுமானால்,உன்னைச் சேர்ந்துள்ள வினைகள் அதிகமாகி நின்று உன்னை ஒறுக்கும்.

966.
சென்றது உனது யுகமும் சிறிது பொ¢து ஒழிய
 நின்ற பெரும் துயா¢துவும் நீங்கும் சில நாளில்
 வென்றவர் தம் அறநெறியின் மெய்யுணர்வு காட்சி
 ஒன்றிஒழுகு உன்கண் வினைஎட்டும் உடன் கெடுக்கும்.
உனது நரக ஆயுள் பெரும்பாலும் முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள ஆயுள் மிகக் குறைவேயாகும். இன்னும் சில நாள்களில் இப்பெருந்துயர் ஒழிந்துவிடும். நல்ஞானத்திலும் நிற்காட்சியிலும் ஒன்றி நின்று வினைகளை வென்ற இறைவனின் அறநெறியினை மனம்கொண்டு ஒழுகுவாயாயின் அது உன்னிடம் பொருந்தி நிற்கும் எண் வினைகளையும் நீக்கிவிடும்.

967.
வாளா¢ உழுவை வாயின் மதகா¢கையில் நஞ்சில்
 சூழ்எ¡¢ அகத்தில் போ¡¢ல் சுறாஎறி கடலில் கானில்
 நீள் அரணாகி நிற்கும் நிரையத்து விழாமல் காக்கும்
 கேள்இனி அறத்தைப்போல கிடைப்பதொன்று இல்லை கண்டாய்.
சிங்கம்,புலி இவற்றின் வாயிலும்,மதம் மிக்க யானையின் கையிலும்,விஷத்திலும்,மூண்டு எ¡¢யும் நெருப்பிலும்,போர்க்களத்திலும்,சுறா மீன்கள் சுற்றும் கடலிலும்,காட்டிலும் சிக்காமல் நமக்குச் சிறந்த அரணாகி நிற்பது,நரகங்களில் வீழாமல் தடுப்பது நல்லறமேயாகும்,அதற்கு நிகரானது வேறெதுவும் இல்லை எனவே அந்தத் திருவறத்தை உறுதியாகக் கேட்கக் கடவாய்.

968.
உம்பர்தம் உலகின் உய்க்கும் உலகினுக்கு இறைமை க்கும்
 வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கும் மெய்யே
 நம்பி நல்லறத்தைப் போலும் துணையில்லை நமக்கு நாடின்
 கம்பமில் நிலைமையாகித் திருவறம் கைக்கொள் என்றேன்.
நம்பியே,அமரர் உலகிற்கு அடைவிக்கும்; மூவுலக பத்வியாகிய வீட்டினை நல்கும்; வாட்டும் இச்சம்சாரத்தில் பிறப்பதைத் தடுத்து முக்தியிலே நிலைக்கச் செய்யும்; ராய்ந்து பார்த்தால்,ன்மாவிற்கு நல்லறத்தினைப்போல் உற்றதுணை வேறில்லை. எனவே சலனமில்லாத உறுதியுடன் #¢னதர்மத்தைக் கைக்கொள் என்று தித்யாப தேவனாகிய யான் கூறினேன்.

969.
என்றலும் இறப்ப என்கண் நலத்து இந்நிலத்துவந்து இன்று
 ஒன்றலா உறுதி சொன்னீர் உம்மொழி வழி நில்லேனேல்
 நின்றனன் என்றும் இந்த நிரயத்து நீங்கலின்றி
 என்றவன் இறைஞ்ச நன்றென்று யான் எனது உலகம் புக்கேன்.
என்று நான் கூறவும்,எனது நன்மையிலே தங்களுக்குண்டான ஈடுபாட்டினால்,இந்த நரகத்துக்கு வந்து இன்று பல வகையான நல்லறங்களை உபதேசித்தீர்கள். இனியும் உமது வழியில் செல்லாது போனால்,எக்காலத்தும் நீங்குதலின்றி இந்த நரகங்களில் உழல்பவனாவேன் என்று என்னை வணங்கவும்,உனக்கு நன்மை விளையட்டும் என ஆசி கூறி நான் எனது உலகமாகிய லாந்தவகல்பத்தை அடைந்தேன்.

  நிரையத்துள் அறவுரைச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page