Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
136.
 கனிந்த நெய்க் கவளம் கையில் வைத்துடன் கழறு வாரை
 முனிந்திடும் களிறு போல்வார் முத்தியை விளைக்கும் நீரார்
 மனம் கொளத் துறந்தி டாதே வால்குழைத்து எச்சிற் கோடும்
 சுணங்கனைப் போலும் நீரார் மாற்றிடைச் சுழலு நீரார்.
வீட்டுலகை விரும்பி நின்ற மாமுனிவர்கள், கையிலே நெய் கலந்த கவளத்தை ஏந்தி அழைத்தாலும் அதை முனிவுடன் வெறுத்துச் செல்கின்ற களிறுக்கு நிகராவர்; உறுதியுடன் உளம் நிறைந்த துறவினை ஏற்காதவர்கள் வாலைக் குழைத்துக்கொண்டு எச்சில் உணவிற்காக ஓடும் நாய்க்கு நிகரானவர், அவர்தாம் பிறவிச் சுழலிலே சிக்கித் தவிக்கும் தன்மையுடையவர்.

137.
நஞ்சினை அமிர்தம் என்றே உண்டவன் அயர்ந்து பின்னைத்
 துஞ்சுவது அஞ்சிக் கான்ற நஞ்சையே துய்த்தல் போலும்
 புஞ்சிய பொறியின் போகம் மாற்றிடைச் சுழற்றும் என்னா
 அஞ்சிமுன் துறந்த போகத்து அருந்தவன் ஆசை தானே.
ஐம்பொறிகளால் ஆகிய இன்பமானது பிறவிச் சுழற்சியில் சிக்க வைக்கும் என அஞ்சி அதை நீக்கித் துறந்த சயந்தன், மீண்டும் அவ்வின்பத்தை விரும்பி நிலை, நஞ்சினை அமுதமென்று மாறாக எண்ணி அருந்திய ஒருவன் தான் அருந்தியது நஞ்சென்று அதை வெளியே துப்பியபின் மீண்டும் அதையே உண்டதற்கு ஒப்பாக அமைந்தது.

138.
ஐந்தலை அரவம் தன்வாய் ஐந்துடன் கலந்த நஞ்சில்
 துன்பம் ஓர் கடிகை யல்லால் துஞ்சினால் தொடர்ந்தி டாதாம்
 ஐம்பொறி அரவம் தன்வாய் ஒன்றினால் ஆய நஞ்சு
 துஞ்சினால் அனேக காலம் தொடர்ந்துநின்று அடுங்கள் கண்டீர்.
ஐந்து தலைகளையுடைய நாகம் தனது ஐந்து வாய்களினாலும் கடித்துச் செலுத்திய நஞ்சானது ஒருகண நேரத் துன்பத்தைக் கொடுத்து இறக்கச் செய்வதல்லாமல் மறுபிறவிக்குத் தொடராது; ஆனால் ஐம்பொறிகள் என்னும் அரவமானது தனது ஒரே வாயினால் செலுத்திய நஞ்சானது பல பிறவிகள் வரை தொடர்ந்து நெடுங்காலம் வரை வாட்டும்.

139.
காட்சியைக் கலக்கி ஞானக் கதிர்ப்பினைத் தி¡¢த்துப் புக்கான்
 மீட்சியில் உலகம் ஏற்றும் ஒழுக்கத்தை அழித்து வையம்
 ஆட்சி பெற் றவனை வையம் அதனுக்கே அடிமை யார்க்கும்
 மாட்சித்தான் நிதானம் தன்னை மனம்கொள்ளார் மதியின்மிக்கார்.
சயந்தன் நற்காட்சியைச் சிதைத்து நல்லறிவாகிய ஒளியை ஒழித்து, மீளா உலகிற்குச் செலுத்தும் உயர் ஒழுக்கத்தை அழித்துச் சென்று பவணலோகத்துத் தலைவனானான், இவ்வுலக வாழ்வை விரும்பி அடைந்தவனை இந்த வையமானது அவனைத் தனக்கு அடிமையார்க்கும் பெருமையுடையது. எனவே அறிஞர் பெருமக்கள் விருப்பச் சிந்தனைக்கு உள்ளத்தே இடம் தரமாட்டார்கள்.

140.
ஒழிந்தநால் வினையும் வென்றிட்டு உலகொரு மூன்றும் ஏத்த
 எழுந்துசென் றுலகத் துச்சி எய்தினான் வைசயந்தன்
 அழுந்திய நிதானத் தாலே சயந்தன்அவ் அமர னாய்க்கீழ்
 விழுந்தனன் ஒழிந்தவீரன் சா¢தையான் விளம்ப லுற்றேன்.
வைசயந்த முனிவனானவன் எஞ்சிய அகாதி கர்மங்கள் நான்கினையும் வென்று மூன்றுலகும் தொழுது நிற்க மேல் நோக்கிச் சென்று உலகத்து உச்சியாகிய வீட்டுலகு எய்தினான், நிலைபெற்ற ஆர்வச் சிந்தனையாலே சயந்தன் அமரனாகிப் பவண லோகத்தே அடைந்தான், அடுத்து எஞ்சியுள்ள சஞ்சயந்த முனிவருடைய வரலாற்றைப் கூறுகின்றேன் கேள் என்று ஆதித்யாபதேவன் தரணேந்திர¨

  வைசயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page