Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
354.
அனகமாய் அனந்த மாய குணம் புணர்ந்து ஆர்வம் ஆதி
 தனையிலாது இயல்பின் நின்றான் தன்மையைத் தன் கண் வைத்து
 நினைதலுக்கு ஏது நல்ல சிறப்பது வினையை நீக்கும்
 கனலிசேர் கனகம் தன்கண் காளத்தைக் கழற்று மாறே.
அடுத்து, அனைத்து கர்மங்களின் நீங்கி முடிவற்ற குணங்களை எய்தி விருப்பு வெறுப்பின்றி அமைதியான இயல்பின் நின்ற இறைவனது தன்மைகளைத் தனதுள்ளத்தே நிலைக்கச் செய்யும் தியாகத்திற்குக் காரணமாக அமைவது பூசையாகும். அப்பூசையானது எப்படி நெருப்பானது பொன்னிலிருக்கும் குறைகளைப் போக்கி ஒளிரச்செய்வது போல் கர்மங்களை நீக்கிக் கெடுக்கும் என்றான்.

355.
இறைவனும் முனியும் நூலும் யாதுமோர் குற்றமில்லா
 நெறியினைத் தெளிதல் காட்சியாம் அது நிறுத்தும் வீட்டில்
 இறுகும் எண் மயம் மும்மூடம் ஆறு தீவினயமின்றி
 நெறிவிளக்குறுத்தல் ஆதி எட்டங்கம் நிறைந்த தென்றான்.
இறைவனையும், அவன் வழியைப் பின்பற்றுகின்ற முனிவனையும், இறைவனால் அருளப்பட்ட நூலையும் குறைவற உணர்ந்து தெளிதல் நற்காட்சி எனப்படும். அக்காட்சியானது வீட்டினை அடையச் செய்யும், மேலும் அக்காட்சியானது எண்வகைச் செருக்குகள், மும்மூடம், ஆறு அவிநயம் ஆகியவற்றையும் நீக்கி அறத்தை விளக்கிக் கூறுதல் முதலிய எண்வகைத் தன்மைகளைப் பெற்று நிறைவுபெறும்

356.
பொ¢ய கொலை பொய் களவு பிறர்மனையில் ஒருவல்
 பொருள் வரைதல் மத்தம் மது புலைசு உணவின் நீங்கல்
 பொ¢ய திசை தண்டம் இருபோகம் வரைந்தாடல்
 மா£இயசிக்கை நான்கும் இவை மனை அறத்தார் சீலம்.
கொலை, பொய், களவு, பிறர்மனை விழைதல் இவற்றை ஒழித்துச் செல்வத்தைத் தேவைக்கு மேல் சேர்த்துவைக்காது, ஊன், தேன், கள் இவற்றை உண்ணாமல், திசை விரதம், தண்ட விரதம், போக உபபோகங்களை அளவுடன் ஏற்றலாகிய விரதம் ஆகியவற்றுடன், சிட்சாவிரதம் நான்கும் ஆகமொத்தம் பன்னிரண்டு விரதங்களும் இல்லற வாழ்வில் ஏற்கவேண்டிய ஒழுக்கங்களாகும். (எ

  பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page