Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
452.
மாதவி உரைத்த எல்லாம் மாதவன் மனத்தை நோக்கும்
 போதியின் உணர்ந்தறத்தைக் புரவலன் பு¡¢ந்து கொள்ளும்
 யாது நீ கவல வேண்டாம் அதனுக்கே ஏதுவாக
 ஓதுமிக் கதையைக் கேட்டு நீயவற் குரைக்க வென்றான்.
துறவினை மேற்கொண்ட இராமதத்தை உரைத்த அனைத்தையும் மாதவ முனிவனாகிய சிம்மச்சந்திரன் தனது மனப்பா¢ய ஞானத்தினாலே உய்த்துணர்ந்து, இறைவனது நல்லறத்தினைப் பூரணச்சந்திரன் விருப்பத்துடன் மேற்கொள்வான். நீ அதைப்பற்றி வருந்த வேண்டாம். அவன் அறத்தை ஏற்பதற்குக் காரணமாக நான் கூறும் இக்கதையை அவனுக்கு நீ கூறுவாயாக என்று அக்கதையை முனிவர்

453.
அடக்கத்தைப் பொதிந்து உயிர்க்கண் அருளினை ஊறுஆறித்
 தொடக்கமும் முடிவும் ஒத்துத் தொடுத்ததோர் மாலை தன்னை
 எடுத்துடன் நாற்றினாற் போன்று இதத்தை எவ்வுயிர்க்கும் ஆக்கும்
 வடுப்பா¢ந் திருந்த சொல்லான் மாதவன் உரைக்க லுற்றான்.
மேலான அடக்கத்துடன் உயிர்கள் மாட்டு அருளினை உள்ளத்தே சுரக்கச் செய்து அமைதித் தன்மையுடன் தொடக்கம் முதல் முடிவுரை ஒரே தன்மையாகத் தொடுக்கப்பட்ட மலர் மாலையை அழகுடன் தொங்க வைத்தது போல், எல்லா உயிர்களுக்கும் நன்மையைச் செய்யும் குற்றமற்ற நற்குணமுடைய முனிவராகிய சிம்மச்சந்திரர் அவ்வரலாற்றினைக் கூறத் தொடங்கினார்.

  பூரண சந்திரன் அரசியற் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page