Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
896.
இரவிபோல் தாப தீபத் திளையவர் வதன மென்னும்
 அரவிந்தம் மலரத் தோன்றும் அரசன்தான் அருக தாசன்
 வரைபுரை மாட மூதூர் மற்றிதற் கிறைவன் தேவி
 சு¡¢குழல் கருங்கண் செவ்வாய்த் தோகைசுவ் வதைஎன் பாளாம்.
மலைகள் போல் உயர்ந்த மாளிகைகள் நிறைந்த அயோத்தியின் அரசன் பொலிவு மிக்க அழகிய மகளி¡¢ன் முகத்தாமரையை மலர்விக்கும் கதிரவன் போன்ற புகழ் மிக்கவன், அருகதாசன் என்னும் பெயா¢னன். அவன் தேவி கருமையான கண்களையும், செந்நிற வாயினையும் உடையவள். மயில் போல் அழகுடைய அவள் பெயர் சுவ்வதை என்பது.

897.
அச்சுதைக் கிறைவ னாய அரதன மாலை அந்தக்
 கச்சணி முலையி னாட்குப் புதல்வனாய்ப் பிறந்த காலை
 நச்சுவேல் வேந்தற் கஞ்சி மன்னவர் நடுங்க வையத்து
 இச்சையை நிறைத்து வீத பயனிவன் என்று சொன்னார்.
அச்சுத கல்பத்து இந்திரனான இரத்தினமாலை கச்சணிந்த தனங்களையுடைய சுவ்வதைக்கு மகனாகப் பிறந்தவுடனே நஞ்சு கலந்த வேலையுடைய அருகதாஸ மன்னனிடம் மற்ற வேந்தர்கள் அனைவரும் அச்ச மெய்தினார். மகன் பிறந்ததும் மற்றவர் வறுமை நீங்குமாறு தானமளித்து புத்திரனுக்கு 'வீத பயன்' எனப் பெயர்ச் சூட்டினர்.

898.
மற்றந்த மன்னன் தேவி வடிநுனைப் பகழி வாட்கண்
 சிற்றிடைப் பரவை அல்குற் சினதத்தைச் சிறுவ னாகிச்
 சுற்றிய காத லால்வந் திரதனா யுதனும் தோன்ற
 வெற்றிவேல் வீரன் பேரும் விபீடணன் என்று சொன்னார்.
அடுத்து; அருகதாச மன்னனின் மற்றொரு மனைவியான கூ¡¢ய அம்பு போன்ற ஒளிமிக்க கண்களையும் நுண்ணிய இடையையுமுடைய சினதத்தையின் வயிற்றில் இரத்தினாயுதனாய் இருந்து பிறகு அச்சுத கல்பத்து அமரனானவன் தன் தேவ வாழ்வு முடிந்து, மகனாகப் பிறந்தான், அவனுக்கு 'விபீடணன்' எனப் பெயா¢ட்டனர்.

899.
இராமகே சவர்க ளாகி எழின்மதி நீல மேகம்
 தரா தலத் திழிந்த போல்வார் தருமமும் புகழும் போன்றும்
 கராமலி கடலின் ஓத மதியொடு பெருகும் வண்ணம்
 பராபவம் பகைவர்க் காக்கும் படியினால் வளர்வு சென்றார்.
முழுமதியும் கார்முகிலும் இந்நிலவுலகில் இறங்கியதைப் போன்று பலதேவ வாசுதேவர்களாகி அறமும் புகழும் போலவும் முதலைகள் வசிக்கும் அலைகடலும் முழு மதியும் போலவும், அதாவது (சந்திரனைக் கண்டு பொங்கும் கடல் போலவும்) இணைந்து பகை வேந்தர்கள் மான பங்க மெய்துமாறு வளர்ந்தார்கள்.

900.
குலமலை இரண்டு போலக் கொற்றவக் குமரர் ஓங்கி
 நிலமகட் கிறைவ ராக நின்றதம் பகைவன் வெம்பி
 மலைமிசைப் பருதி யோடு மால்கட லிரண்டு வந்து
 நிலமிசைப் பொருவ போன்று நின்றுபோர் தொடங்கி னாரே.
குல மலைகள் போல விளங்கிய அரச குமாரர்கள் இருவரும் மன்னர்களாகிப் புகழ் பரவ நின்றதைக்கண்ட அவர்களுடைய பகைவனான பிரதி வாசுதேவன் மிகவும் சினம் கொண்டு, படை கொண்டு இவர்களுடன் மோதினான். மலைமிசை தோன்றிய கதிரவனுடன் சூழ்ந்துள்ள கடல்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுவது போல் அந்தப் போர் நிகழ்ச்சிக் காட்சியளித்தது. கா¢ய மலை போன்ற யானை மேல் கதிரவன் போல், மன்னர்கள் அமர்ந்து அலைகடல் போல் படைகள் மோத கடும் போர் துவங்கினர்.

  பலதேவன் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page