Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
818.
துன்பத் தால்இன்பம் துய்த்தல் அல்லது
 துன்பத் தால்இன்பம் துய்க்க எண்ணுதல்
 அன்பில் காஞ்சிரம் ஆக்கி மாங்கனி
 தின்குற்றது அக்தவர் சிந்தை வண்ணமே.
வருத்தித் தவம் செய்ததால் வருவது துன்பமே அதனால் இன்பத்தைப் பெற எண்ணுதல் எட்டிமரத்தை வளர்த்து அதில் மாம்பழத்தைப் பெற்று உண்ண நினைப்பதற்கு ஈடாகும், அவர்கள் எண்ணம் அத்தகையதே.

819.
வினைகள் வேறுபட்டு உதயம் செய்தலால்
 இனைய சிந்தைய னாகிச் செல்லுநாள்
 முனிவன் வச்சிர தந்தன் மொய்ம்மலர்
 வனம னோகரம் வந்து நண்ணினான்.
தீய வினைகள் உதயத்திற்கு வந்தால் அரசன் இத்தகு தீய சிந்தனையுடையவனாய் செல்லுங்காலத்தில் வச்சிரதந்தன் என்னம் முனிவர், மன்னனுக்கு¡¢ய மனோகரம் என்னும் மலர் வனத்தில் தனது முனி சங்கத்தோடு வந்தடைந்தான்.

820.
மேரு மால்வனப் பத்தி ராலத்துள்
 வார ணம்மலை சூழ் நின்றதும்
 வீர மாதவர் சூழ மெய்த்தவன்
 தார கைமதி தானும் ஒத்தனன்.
மேலான தவத்தையுடைய வஜ்ஜிர தந்த முனிவன்பான்மை நிறைந்த மாமுனிவர்கள் சூழ அவ்வனத்தில் தங்கி நின்ற காட்சி, மேருமலையானது பத்ராசலவனத்தில் திசை மலைகள் சூழ நின்றது போலவும், விண் மீன்களுக்கிடையே ஒளி வீசும் முழுமதி போலவும் விளங்கியது.

821.
பிறவி மாக்கடல் பெயர்க்கும் ஆற்றலால்
 இறைவன் அன்னவன் ஏந்து கொள்கையான்
 மறுவின் மாதவன் வையம் மூன்றினும்
 உறவி நின்றவாறு ஓத ஒன்றினான்.
பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் ஆற்றல்மிக்க பான்மையாளனாய் அருக பெருமானுக்கு நிகர்த்தவனாய் நல்லொழுக்கமுடையவனாய் குற்றமற்ற அம்மாமுனிவன் இம்மூவுலகத்திலும் உயிர்கள் பொருந்தி நிற்கின்ற மூவுலக நிலையை முனிவர்களுக்கு உபதேசித்தான்.

822.
ஒன்றி ரண்டுஒரு மூன்று நாலைந்தாய்
 நின்ற ஐம்பொறி நெறியின் வாழுயிர்
 ஒன்று நீர்மர நிலநெருப்பு காற்று
 என்றிக் காயமைந்து எய்தி வாழுமே.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வா¢சையில் பொறிகளைப் பெற்ற நிலைகளில் வாழும் உயிர்களில் தொடு உணர்வாகிய ஒன்றை மட்டும் பெற்ற உயிர்கள் நீர், மரம், நிலம், நெருப்பு, காற்று ஆகிய இந்த ஐந்தையும் உடலாக எய்தி வாழும்.

  வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page