Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
459.
போதன புரத்து வேந்தன் பூரசந் திரனும் தோகை
மாதனம் புணர்ந்து வந்த இன்பத்து மயங்கு நாளுள்
காதலாள் மதுரை அந்தக் காவலன் தேவி தன்பால்
மாதராள் ஒருத்தி யானாள் மற்றவள் நீ கண்டாயே.
போதனபுரத்து மன்னன் பூரசந்திரனும், மயில் போன்ற இரணியவதியும் மிக்க இன்பத்தை எய்தி வாழ்வில் மயங்கிக் கிடந்த காலத்து முற் பிறவியில் மனைவியாக இருந்த மதுரையானவள் இப்பிறவியில் இரணியவதிக்கு மகளாகப் பிறந்தாள். இராமதத்தையே! நீ தான் அவள் என்பதை அறிந்துகொள்வாய் (என முனிவன் கூறினான்).

460.
அருந்தவ னருளி னால்அப் பத்திர மித்தி ரன்தான்
திருந்திய குணத்து நின்பால் சீயசந்திர னென் றானேன்
வருந்துநுண் ணுடையி னாள் அவ் வாருணி வந்துன் காதல்
பொருந்திய புதல்வ னாய்அப் பூரசந்திர னென் றானாள்.
வரதர்ம முனிவருடைய அருளுபதேசப் புண்ணியத்தினால் மேலான குணங்களையுடைய பத்திரமித்திரன் உன் வயிற்றிலே சீயசந்திரன் என்னும் நான் மகனாகப் பிறந்தேன். முன்பு உனக்கு மகளாக இருந்த வாருணி, இப்போது பூரணசந்திரன் என்னும் இரண்டாவது மகனாகப் பிறந்து உன் அன்பிற்கு¡¢யவனாக விளங்குகின்றான்.

461.
ஆதலால் அவன்க ணீங்காக் 
காதலை ஆயி னாய்நீ
போதுலாம் அலங்க லானும்
கோதிலாக் குணத்த னாமே.
தொடர்ந்து வரும் உறவால் அவன் மீது மாறாத அன்பு கொண்டுள்ளாய். மலர் மாலைகளணிந்த பூரணச்சந்திரனும் குற்றமற்ற உயர்குணமுடையவன் தான் அதில் ஐயமில்லை.

462.
வினையெனும் குயவன் நம்மை வேண்டுரு இயற்றல் கண்டாய்
அனகனாம் உருவம் தன்னைப் பெண்ணுரு ஆக்கி யாங்கே
மனைவியை மகளு மாக்கி மகளையே மைந்த னாக்கி
நினைவினான் முடித்து நின்றார் நீதியார் கடக்க வல்லார்.
தேவியே! சிந்தித்துப்பார். வினை என்னும் குயவன் நம்மை எப்படி எப்படி யெல்லாம் உருமாற்றி யிருக்கின்றான். பாபங்களைப் போக்கும் அந்தணனைப் பெண்ணாகப் பிறக்கச் செய்தான். அப்போது மனைவியாக இருந்தவளை மகளாகவும், மகளை மகனாகவும் செய்து அவரவர் மனப் பா¢ணாமப்படி மாற்றியுள்ள நியதியை யாரால் மாற்ற இயலும்?

463.
பத்திர பாகு என்னும் பரமமா முனிவன் பா¡¢ல்
உத்தமன் பாதம் சேர்ந்துன் பிதாவின்று முனிவ னாகி
இத்தல மேத்த நின்றான் எனக்குவந் திதத்தை யோதிச்
சித்தமெய் மொழிகள் மூன்றுஞ் செறிவித்த குரவ னாவான்.
மிகச் சிறந்த உத்தம முனிவராகிய பத்திரபாகு என்பவரது பாதங்களை அடைந்து, துறவை மேற்கொண்ட உனது தந்தை உலகம் ஏத்துமாறு தவவாழ்வை மேற்கொண்டார். அவரே எனக்கு நன்மை பயப்பதான அறத்தினை மனங்கொள்ளச் செய்து மனம், மொழி, செயல்களை நன்னெறிப்படுத்தி மேல் நிலைப்படுத்திய குருவாக விளங்கினார்.

  நால்வரும் சுவர்க்கம் புக்க சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page