Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
362.
அருளினால் உயிர்கட்கு ஈந்த அப்பொருள் நிமித்தமாக
 வெருவினால் மயங்கி வாழும் விலங்கில் இவ்வேழைத் தோற்றம்
 இருள் இலாத் தேவர் கோயிற்கு இட்டதோர் விளக்கின் மேலே
 மருளினால் விட்டில் பாய்ந்து மா¢த்ததே போல்வ தொன்றே.
தனது மகன் மற்றவர்கள் மீது அருள் கொண்டு வழங்கிய செல்வமே காரணமாக (அதாவது அச்செல்வம் போகின்றதே என்ற எண்ணத்தினால்) எப்போதும் அச்சத்துடன் வெருவி வாழ்கின்ற விலங்குப் பிறவியாக அந்தப் பேதைப் பெண் இவ்வாறு பிறந்த நிலை, இருளற்ற இறைவனது ஆலயத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கில் மயங்கி விழுந்து மடிந்த விட்டில் பூச்சினைப் போலிருந்தது.

363.
அப்பச்சக் காணமாய கோப லோபத்தினாலே
 செப்பட்ட பிறவியாள் அவ்வனத்திடைத் தி¡¢யும் 
 கைப்பட்ட பொருளை எல்லாம் கருணையால் ஈயும் அந்த
 மெய்ப்பட்ட புகழினான் அவ்வனத்திடை விரகிற் புக்கான்,
செயல்படாமல் மனத்தளவில் தொடர்ந்து நின்ற அவளது செற்றம், செருக்கு, மயக்கம் மிக்க மனநிலை காரணமாக முன் கூறிய வண்ணம் புலியாகப் பிறந்து வளர்ந்து வனத்தில் தி¡¢ந்து வரும் காலத்தில் ஒரு நாள் தனது கைப்பொருளையெல்லாம் அருளுடன் வறியவர்க்கீயும், உயர்புகழினையுடைய பத்திரமித்திரன் அக்காட்டின் எழிலைக் காண மகிழ்ச்சியுடன் வந்தான்.

364.
காரணம் தான் ஒன்றின் றிக் கருமத்தின் பெருமையாலே
 வார் அணிந்து இலங்கும் கொங்கை மங்கையரோடு அவ்வள்ளல்
 தாரணி சோலைக் குன்றம் தன்னுளே தி¡¢யும் போழ்தில்
 வேர நின்று இலங்கும் சிந்தை வேங்கை நின்றதனைக் கண்டான்.
அவனுடன் வந்த கச்சணிந்த அழகிய பெண்களுடன் அவ்வள்ளல் மகிழ்ச்சியாக சுற்றிப் பார்க்கின்ற போது முன் வினைப் பயனால் காரணம் ஒன்றுமில்லாமல் உள்ளத்தில் வைரத்துடன் தன்னையே நோக்கி நின்ற அப்புலியினைப் பத்திரமித்திரன் பார்த்து விட்டான்.

365.
கண்டவன் பெயரும் எல்லைக் கடியதோர் பசியினாலும்
 எண்திசை யவரும் நிற்ப எழுந்த வேரத்தும் ஓடி
 விண்டு எ¡¢ விளக்கின் மேலே விட்டில் பாய்ந்திட்டதே போல்
 தண்டிவர் தோளினான் மேல் தாய்ப்புலி பாய்ந்ததன்றே.
கண்டவுடனே அதனிடமிருந்து தப்ப வேண்டுமென்ற எண்ணத்துடன் அப்பாற் செல்ல முற்பட்டான். அதே நேரத்தில், மிக்க பசியுடனும், சினத்துடனும் நின்ற புலியானது சூழ்ந்து நின்ற மற்றவர்களை விட்டு விட்டு விரைந்து ஓடி மிக்கு எ¡¢கின்ற விளக்கிலே பாய்ந்து விளக்கினை அவித்த விட்டில் பூச்சினைப்போல் வணிகன் மேல் பாய்ந்து இரும்புத் தண்டினைப் போன்ற தோள்களையுடை

366.
வேபியா பசியின் வாடி விழும் உயிர்க்கு ஈயக்கண்டு
 கோபியா வஞ்ச நெஞ்சிற் கருணை ஒன்றின்றிச் செத்தும்
 தீபியாப் பிறந்து நின்று மகனையும் தின்ற இந்தப்
 பாபியைப் போல கில்லார்க் கருணையைப் பயில்கை நன்றே.
வாட்டும் பசியினால் சோர்ந்து விடுகின்ற வறியோர்க்கு உதவியதைக் கண்டு மனம் பொறாது அருளின்றி சினம் மிக்கு வஞ்ச உள்ளத்துடன் இறந்தபிறகும் புலியாகப் பிறந்து காட்டில் தி¡¢ந்துமுன்பு தனது மகனாக இருந்தவனைக் கொன்று தின்ற இந்தக் கொடியவளைப் போல் இராமல் அருளுடன் வாழ்தல் நல்லது.

  பூரண சந்திரன் அரசியற் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page