Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
229.
வேதம் நான்கு, அங்கம் ஆறும் புராணமும் வி¡¢க்கும் சொல்லில்
 தீதிலா 'சத்திய கோடன்' நாமம் சீபூதி என்பான்
 போதுலா முடியி னானுக்கு அமைச்சனாய்ப் புணர்ந்து பின்னைத்
 தீதெலாம் அகற்றி வையம் செவ்வியால் காக்கும் நாளால்.

நான்கு வேதங்களையும், அறுவகை நீதி நூல்களையும், பதினெட்டு புராணங்களையும் உணர்ந்து உரைக்கும் ஆற்றலுடையவன், குற்றமற்ற சொற்களால் உண்மையைப் பேசுகின்றவன் 'சிபூதி' என்னும் பெயருடையவன்; மலர் மாலைகள் விளங்கும் முடியுடை வேந்தன் சீயசேனனுக்கு அமைச்சனாக அமைந்ததால், உலகின் தீமைகளை அகற்றி ஆட்சி சிறப்பாக நடந்து வரும் நாளில்.

230.
பத்ம சங்க நிதிக்கிட மாயது
 பத்ம சண்டம் எனப்பகர் மாநகர்
 மற்றதன்கண் வணிகொரு வன்உளன்
 சொற்க டந்த கொடைக்கைச் சுதத்தனே.

அதே நாட்டில், பத்மம், சங்கம் என்னும் பெருநிதிகளுக்கு இருப்பிடமாகிய பத்மசண்டம் என்னும் பெயருடைய நகரத்தில் புலவர்களும் புகழ்தற்கா¢ய வள்ளல் தன்மைமிக்க 'சுதத்தன்' என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.

231.
மற்ற வன்தன் மனைக்கு விளக்கனாள்
 சுற்ற நன்மையின் நாமம் சுமித்திரை
 விற்கு னிப்புரு வத்தொளிர் வேற்கனாள்
 கற்ப லர்ந்தஓர் காமரு வல்லியே.

ஒளி விளக்கு போல் விளங்கும் அவனுடைய மனைவியானவள் வில் போன்ற வளைந்த புருவங்களும், வேள் போன்ற கண்களையு முடையவள், சுற்றங்களுக்கு நன்மை பயப்பவள், சுமித்திரை என்னும் பெயரும், நிறைந்த கற்பும் பெற்று அழகிய பூங்கொடி போன்று விளங்கினாள்.

232.
அந்தி யும்அகல் வானும்முன் னாளினால்
 இந்து வைப்பயந் தாங்குஅவ் விருவரும்
 மைந்த னைப்பயந் தார்மதி போல் வளர்ந்து
 அந்த மில்உவ கைக்கிட மாயினான்.
மேல் திசையும், மாலை நேரமும் இணைந்து பிறைச்சந்திரனைப் பெற்றெடுத்தது போல், இவர்கள் ஒரு மைந்தனைப் பெற்றார்கள். அவன் சந்திரன் போல் வளர்ந்து முடிவற்ற இன்பத்திற் கிடமாக விளங்கினான்.

233.
சுரந்த கார்முகில் போல சுதத்தன் என்று
 இரந்த வார்க்கு இடர் தீர வளித்தவன்
 பரந்து லாம் பெயர் பத்திர மித்திரன்எம்
 அரந்தை தீர்த்தலின் ஆமென ஓதினான்.
நீர் கொண்ட முகிலுக்கு நிகரானவன் சுதத்தன் என்று போற்றும் வண்ணம் இரந்தவர்கள் வறுமை தீரும்படி வா¡¢ வழங்கிய வணிகனானவன் 'எமது குறை தீரும் வண்ணம் பிறந்த இவனது புகழ்மிக்க பெயர் பத்திரமித்¢ரன்' எனச்சூட்டி அனைவர்க்கும் அறிவித்தான்.

  பத்ரமித்திரன் அறங்கேள்விச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page