Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
146.
காமமாம் அரணி யத்தைக் கடந்தபின் மடங்கல் போலும்
 வாமம்ஆர்ந் திலங்கும் மாட மனோகர புரத்தைச் சேர்ந்த
 பீமமாம் அரணி யத்தில் பொ¢யவன் நின்ற போழ்தில்
 சாமமார்ந் திலங்கும் மேனித் தானவன் ஒருவன் வந்தான்.
தூயோனாகிய மாமுனிவன் எட்டு வகையான தூய்மைகளினால் ஒன்பது யோகங்களை ஏற்று, பத்துவித ஊற்றுகளைத் தடுத்துப் பதினோரு ஆகம அறிவினைப் பெற்றுப் பன்னிருவகைச் சிந்தனைகளில் மனதைச் செலுத்தி அசையாத் தியானத்திலே நின்று பதின்மூன்று ஒழுக்கங்களை ஏற்கும் பயிற்சியில் நின்றான்.

147.
வித்துத் தந்தன் என்பவன் விச்சாதர வேந்தன்
 மத்தத் தந்தி போல்பவன் வானம் வழியாக
 முத்தத் தந்த மொய்குழல் சாமை யொடுசெல்வான்
 சித்தத் தந்த மின்றி நின்றவன் மேற்சென்றான்.
வித்துத்தந்தன் என்னும் பெயருடைய மதயானையைப் போன்ற அந்த விஞ்சையர் வேந்தன் முத்துப்போல் அழகிய பற்களையும் அடர்ந்த கூந்தலையுமுடைய தனது மன¨வி 'சாமை' என்பவளுடன் விமானத்திலே வானத்தில் செல்லுகின்றபோது உள்ளத்தே இருளின்றித் தவத்தில் தங்கிய முனிவருக்கு மேலே வந்தான்.

148.
மண்மேல் நின்ற மாதவர்கோன்மீது ஓடாதாய்
 விண்மேல் நின்ற விமானம் கண்டு வியப்பெய்திப்
 புண்மேல் வேலால் ஏறுண் டான்போல் புகைந்து ஆற்றான்
 கண்மேல் கண்டான் கைவலச் செல்விக்கு அணியானை.
மண்ணிலே தவத்தில் நின்ற முனிவருக்கு மேலே கடக்க முடியாமல் விமானம் விண்ணிலே நின்றது. இதைக்கண்டு வியப்படைந்த வித்துத்தந்தன் புண்ணிலே வேல்பட்டவன் போல் துடித்தெழுந்து கேவல ஞானமென்னும் திருமகளுக்கு அணி செய்யும் தலைவனான முனிவனைக் கண்டான்.

149.
காணாநின்ற வேரம் கனற்றக் கடிதோடி
 மாணான் ஏந்தி மாதவர் கோனைக் கொடுவந்து
 சேணாறு ஓடும் விமான மேற்றிச் செல்கென்றான்
 வேணார் வெள்ளி மலையின் இவண்கீழ்ப் பரதத்தே.
கண்டவுடனே பல பிறவிகளில் தொடர்ந்து வந்த வைர உணர்வானது கிளர்ந்தெழவும், உயர் குணமற்ற அந்த விஞ்சையன் விரைந்து ஓடிச் சென்று அம்மாமுனிவரைத் தூக்கிக் கொண்டு வந்து தனது வானவூர்தியில் அமர்த்தி மூங்கில்கள் நிறைந்த வெள்ளி மலையின் சாரலிலே உள்ள பரத கண்டத்தை நோக்கி விமானத்தைச் செலுத்தினான்.

150.
வந்தான் குமுதா வதியும் அ¡¢நற் சுவணம் பொன்
 கந்தார் கயமும் வதிபின் வைத்த நதிமூன்றும்
 சந்தார் சண்ட வேகையும் ஆய நாமத்தின்
 ஐந்தா றும் சென்று ஒன்றாம் தடத்தின் நடுவாக.
குமுதாவதி, அ¡¢வதி, சுவணவதி, கஜவதி சந்தன மரங்கள் நிறைந்த சண்டவேகை என்னும் ஐந்து ஆறுகள் ஒன்று சேர்கின்ற இடத்தின் நடுப்பகுதிக்குச் சென்றான். அப்போது,

  சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page