Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
1053.
மணிமயமாய சுக்கம் நான்று, மங்கலங்கள் ஏந்தி
 அணிபெற நின்ற நான்காம் அந்த மானத்தம்பத்தை
 இணையிலார் வலம்கொண்டு ஏத்தி இறைஞ்சிப் போய்க் கோசம்நீல
 மணிநிலத்து அகழி மார்பின் அளவுள மதிலைக் கண்டார்.
இலக்குமி அமர்ந்திருந்த பலகையில் இரத்தின மயமான உறிகளில் அட்டமங்கலங்கள் அழகாக அமைந்திருந்தன. சமவ சரணத்தின் முதல் நிலத்தின் மையத்தில், மாபெரும் வீதிகள் நான்கிலும் ஓங்கி நின்ற மானத்தம்பங்களை, இணையற்ற மேருமந்தரர் இருவரும் வலம் வந்து தொழுது அந்நிலத்தின் எஞ்சிய பாதிதூரத்தைக் கடந்து சென்று மார்பளவு உயரமுடைய மதிலையும் நீலமணி போன்று நீர்நிறைந்த அகழியையும் கண்டனர்.

1054.
ஆழமும் நிறையும் உண்டேயாகிலும் அலையென்பானில்
 ஊழிபேர்ந்தாலும் பேரா இதனையான் ஒழிப்பன் என்று இங்கு
 ஆழிவந்து இறைவன் பாதம் அடைந்து பூம்பட்டைப் போர்த்துச்
 சூழுந்தான் கிடந்தது ஒத்துத் தோன்றும் இப்பா¢கை என்றார்.
அந்த அகழியானது, ஆழமான நீர்நிறைந்திருந்தாலும் அதன் தோற்றம், பெருங்கடலானது ஊழிக்காலத்திலும் நீங்காத அலைகளை நீக்கி அமைதியாக இந்த அகழியில் நிறைந்திருந்து, பூக்களைப் போர்வையாகப் போர்த்துக்கொண்டு, இறைவனது திருவடிகளை அடைந்ததுபோல் தோன்றும் என்றார்.

1055.
மணி தெளித்தனைய வா¡¢ வாசவான் சுவையது ஆர்ந்துஅங்கு
 அணுகுவார்க்கு ஆழ்ந்து தோன்றி அடைந்தவர் தாள்மாட்டாகிப்
 பணி உயிர்விலாது போதில் பயின்று பைம் பொன் செய் வீதி
 மணியொளி பரந்து வான விற்களாய் மயங்கு நின்றே.
நீல மணியை நீராக்கியதுபோல் தோன்றும் அகழியின் தண்ணீரானது, அழகும் சுவையும் சேர்ந்தாய், அதில் இறங்கியவர்களின் முழந்தாள் அளவாகி அடிமட்டம் மேடுபள்ளமின்றி, மலர்நிறைந்து தோன்றியது. இரத்தினங்களின் ஒளியினால் நான்கு வீதிகளும் வானவில் போன்று பல வண்ணங்களை உடையதாய் மயங்கச் செய்தன.

1056.
காதத்தின் அரை அகன்ற, காதிகைக் கமலம் ஆதிப்
 போதைக் கொய்து, அங்கை ஏந்திப் பொன்செய் தோணரம் கடந்து
 மேதக்க மணியின் ஆய, பாதத்த வீதி நின்ற
 ஆதிகோபுரத்தின் ஆதிநிலை அளவாகி அம்பொன்.
அரைக்காத அளவு அகன்றிருந்த அகழியில் தாமரை முதலிய மலர்களைக் கொய்து கைகளில் ஏந்தி - பொன்னால் அமைந்த வீதிகளில் தோரணங்களைக் கடந்து, அடுத்து வரும் உதயதர கோபுரத்தின் முதல்நிலை அளவு உயரமுடையதும் பொன்னாலும் மணிகளாலும் இயன்றதுமான கோபுரத்தைச் சேர்ந்தனர்.

1057.
பாலிகை முதலவாய பா¢ச்சந்தமுடைய வற்றை
 மாலையும் சாந்தும் ஏந்தி வணங்கினராகிப் போகி
 சீலம் போல் செம்பொன் இஞ்சிச் சிலைகள் ஈரொன்பது ஓங்கி
 மாலைபோல் சூடிக் காதம் அகல்வல்லி வனத்தைச் சேர்ந்தார்
கோபுரங்களுக்கு இருக்கவேண்டிய அனைத்து இலக்கணங்களும் பொருந்திய அந்த கோபுரங்களையும், பொன்னால் அமைந்து, பதினெட்டுவில் உயரம் உடையதும், உயர்ந்தோர் ஒழுக்கம் போல் ஒழுங்காக இருந்ததும் ஆகிய மதிலையும், மாலை, சந்தனம் முதலியவற்றைத்தா¢த்த அரசிளங்குமாரர்கள் வணங்கி மதிலின் உட்புறத்தில் ஒருகாத அகலமுடைய வல்லி வனத்தை அடைந்தனர்.

  சமவ சரணச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page